Share Market Holiday: மும்பை, தேசியப் பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை! காரணம் என்ன?

By Pothy RajFirst Published Nov 8, 2022, 9:30 AM IST
Highlights

மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தைகளுக்கு இன்று(8ம்தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் இன்று முழுவதும் வர்த்தகம் ஏதும் நடைபெறாது என்று செபி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தைகளுக்கு இன்று(8ம்தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் இன்று முழுவதும் வர்த்தகம் ஏதும் நடைபெறாது என்று செபி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுவதால் பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது என்று பிஎஸ்இ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஷி! பங்குச்சந்தையில் காளை முகம்! சென்செக்ஸ், நிப்டி ஏற்றம்: வங்கி, உலோகப் பங்குகள் ஜோர்!

பங்குச்சந்தை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களின் பட்டியலில் குருநானக் ஜெயந்தி அன்று விடுமுறையும், அன்றைய தினம் பங்கு வர்த்தகம், அந்நியச்செலாவணிச் சந்தை, வட்டிவீத டிரைவேட்டிஸ் உள்ளிட்ட எந்த வர்த்தகமும் நடைபெறாது எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது

அதேநேரம், கமாடிட்டி வர்த்தகத்தைப் பொறுத்தவரை காலை நேர வர்த்தகம் நடைபெறாது ஆனால், மாலைநேர வர்த்தகம் அதாவது மாலை 5 மணி முதல் இரவு வரை வர்த்தகம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 2வது வாரத்தில் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறையா?

இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு இந்த ஆண்டில் விடப்படும் 16வது விடுமுறை நாளாகும். நாளை(9ம்தேதி) வழக்கம்போல் பங்குச்சந்தைகள் இயங்கும், வர்த்தகம் நடைபெறும்.

கடந்த மாதம் தசரா, தீபாவளி மற்றும் தீபாவளி பலிபிரதிபடா ஆகிய பண்டிகைகளுக்காக பங்குச்சந்தை விடுமுறைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் நேற்றைய வர்த்தகம் முடிவில் ஏற்றத்துடன் முடிந்தன. மும்பை  பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 230 புள்ளிகள் அதிகரித்து, 61ஆயிரம் புள்ளிகளைக் கடந்து, 61,185 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 0.4% உயர்ந்து, 18,202 புள்ளிகளில் நிலைபெற்றது. 

திருமணத்தின் மூலம் ஒரே மாதத்தில் நாட்டில் 3.75 லட்சம் கோடிக்கு வர்த்தகம் எதிர்பார்ப்பு; புதிய ஆய்வில் தகவல்!!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வுடன் முடிந்தது. டாலருக்கு எதிராக 45 பைசா அதிகரித்து, இந்திய ரூபாய் மதிப்பு ரூ.81.90ல் முடிந்தது.


 

click me!