
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7, சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது.
சிக்கலில் பொருளாதாரம்
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதையும் படிங்க;- GST Collection in June: 2-வது அதிகபட்ச சாதனை வசூல்: ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 56% அதிகரிப்பு
தங்கம் விலை
இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ. 4,792-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336-க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க;- reliance: windfall tax:பெட்ரோல், டீசலுக்கு ஏற்றுமதி வரி: ரிலையன்ஸ், வேதாந்தாவுக்கு செக் வைத்த மத்திய அரசு
வெள்ளி விலை
வெள்ளியின் விலை குறைந்துள்ள. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.63,500 விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.