நடப்பு நிதியாண்டின்(2022-23) ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.44 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின்(2022-23) ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.44 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்ததுதான் அதிகபட்சமாகும். அதைவிட சற்று குறைந்து 2-வது இடத்தை ஜூன் மாத வசூல் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாத ஜிஎஸ்டி வசூலைவிட, 56 சதவீதம் அதிகமாகும்.
ஆனால், 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல்ரூ.92,800 கோடிதான் வசூல் இருந்தது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து 5 முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சத்தைக் கடந்துள்ளது.
மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.ஒரு லட்சத்து 44ஆயிரத்து 616 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.25 ஆயிரத்து 306 கோடி.
மாநில ஜிஎஸ்டி வரி ரூ.32 ஆயிரத்து 406 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.75 ஆயிரத்து 887கோடி. இதில் செஸ் வரியாக ரூ.11 ஆயிரத்து 018 கோடி கிடைத்துள்ளது.ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.29,588 கோடியும், மாநிலங்களுக்கு ரூ.24,235 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் வருவாய் 55 சதவீதம் அதிகரி்த்துள்ளது, உள்நாட்டு பரிமாற்றம் மூலம் வருவாய் 56 சதவீதம் உயர்ந்துள்ளது. மே மாதத்தில் இவே பில் 7.3 கோடி உருவாகியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தைவிட 2 சதவீதம் குறைவாகும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது