reliance: windfall tax:பெட்ரோல், டீசலுக்கு ஏற்றுமதி வரி: ரிலையன்ஸ், வேதாந்தாவுக்கு செக் வைத்த மத்திய அரசு

By Pothy Raj  |  First Published Jul 1, 2022, 2:00 PM IST

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து அதிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு திடீரென வரிவிதித்துள்ளது.


இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து அதிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு திடீரென வரிவிதித்துள்ளது.

தங்கத்துக்கான இறக்குமதி வரி 5 % அதிகரி்ப்பு: காரணம் என்ன? தங்கக்கடத்தல் அதிகரிக்கும்?

Tap to resize

Latest Videos

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஓன்ஜிசி, வேதாந்தா குழுமம், ரிலையன்ஸ் நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகின்றன. அதில் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்து நல்ல லாபம் பார்த்துவருகின்றன. இதற்கு செக் வைக்கும் வகையிலும், உள்நாட்டில் விலையைக் குறைக்கும் வகையிலும் ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

பெட்ரோல், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.6, டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.13 வரியாக விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதிஅமைச்சகம் வெளியி்டட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் டன்னுக்கு ரூ.23,250 வரியாகவும் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய் எடுத்து ஓன்ஜிசி நிறுவனம் மிகப்பெரிய லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து இந்த வரிவிதிக்கப்பட்டுள்ளது.

gst day 2022: 6-வது ஆண்டு: ஜிஎஸ்டிவரி கடந்து வந்த பாதை: ப.சிதம்பரம் முதல் சீதாராமன் வரை

ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா, கெயின் ஆயில்அன்ட் கேஸ் ஆஃப் வேதாந்தா ஆகியவை உள்நாட்டில் 2.90கோடி டன் கச்சா எண்ணெய் எடுத்து அரசுக்கு ரூ.67,435 கோடி கிடைக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ரஷ்யா மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷ்யாவில் உள்ள ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் நயாரா எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீ்ஸ் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்து ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் அனுப்பி வந்தன. இதையடுத்து, இந்த ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்றீங்களா! இந்த 5 விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்க

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதனால்தான் இங்கு பெட்ரோல்,டீசல் தயாரித்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் திடீரென பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்குகாரணம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்வதுதான் எனத் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

click me!