தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிரடியாக மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிரடியாக மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
நாட்டின் தங்கம் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது.இதையடுத்து, தங்கம் இறக்குமதிக்கான வரியை உயர்த்தியுள்ளது.
கடந்த மே மாதத்தில் தங்கம்107 டன் இற்ககுமதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் ஏறக்குறைய இதே அளவுஇறக்குமதியாகியிருக்கும். உலகின் 2-வது பெரிய தங்கம் இறக்குமதியாளரான இந்தியா,நடப்புக் கணக்குப்பற்றாக்குறை, பொருளாதாரப் பிரச்சினைகள், ரூபாய் மதிப்பு சரிவால் திண்டாடுகிறது.
நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை உச்சகட்டமாக 2429 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தியா கடந்த மே மாதத்தில் 6.03 பில்லியன் டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 9 மடங்குஅதிகமாகும்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்புவதால், தங்கம் இறக்குமதி அதிகரி்த்துள்ளது.
தங்கத்துக்கு 7.5 சதவீதம் இருந்த இறக்குமதிவரி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு 12.5சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தவிர வேளாண் செஸ் 2.5 சதவீதம் என மொத்தம் 15 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும்.
மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்டஅறிவிப்பில், “ தங்கம் இறக்குமதி திடீரென அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 107 டன் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. ஜூன் மாதத்திலும் இதே அளவு அதிகரிக்கும். தங்கம் இறக்குமதி அதிகரிப்பால் நடப்புக்கணக்குப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து வெளியேறிவருவதால், டாலர்கள் தேவை அதிகரிக்கிறது. இதனால், டாலர் கையிருப்பு குறைந்து வருகிறது, மேலும் தங்கம் இறக்குமதிக்கும் டாலர் செலவு அதிகரிக்கிறது. இதனால் அரசின் அந்நியச் செலவாணியும் குறைகிறது. இந்த நெருக்கடியைச்சமாளிக்கவே, தங்கம் இறக்குமதி வரியை அரசு உயர்த்தியுள்ளது.
தங்கக் கடத்தல் அதிகரித்துவருவதால், 7.5 சதவீதம் விதித்த இறக்குமதி வரியை 4 சதவீதமாகக் குறைக்க தங்கநகை வர்த்தகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இப்போது தங்கம் இறக்குமதி வரி 12.5 சதவீதாகஅதிகரித்துள்ளதால், இனிமேல், தங்கக்கடத்தல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.