நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரியான சரக்கு மற்றும் சேவை வரி எனச் சொல்லப்படும் ஜிஎஸ்டி வரி(GST) நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 101வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம்தேதி ஜிஎஸ்டி வரி நாடுமுழுவதும் அமலுக்கு வந்தது
மாநில அரசுகள் விதித்து வந்த பல்வேறு வரிகளை நீக்கிவிட்டு, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரியான சரக்கு மற்றும் சேவை வரி எனச் சொல்லப்படும் ஜிஎஸ்டி வரி(GST) நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பிடிஆர் அழைப்பை ஏற்றார் நிர்மலா சீதாராமன்
மாநிலங்களின் கருத்தொற்றுமை
101வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம்தேதி ஜிஎஸ்டி வரி நாடுமுழுவதும் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரிகளை நிர்ணயிப்பது, மாற்றுவது, திருத்துவது, நீக்குவது, புதிய வரிகள் விதிப்பது என அனைத்தையும் ஜிஎஸ்டி கவுன்சில் செய்கிறது. அனைத்து மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் சேர்ந்ததே ஜிஎஸ்டி கவுன்சிலாகும். அனைத்து மாநிலங்களின் கருத்தொற்றுமையின் வடிவம்தான் ஜிஎஸ்டி கவுன்சில்.
வரிபடிநிலை
ஜிஎஸ்டி வரியில் 5 விதமான படிநிலைகளில் வரிவசூல் நடக்கிறது. 0%, 5%, 12%, 18%,28% ஆகிய சதவீதத்தில் பல்வேறு பொருட்கள், சேவைகளுக்கு வரிவீதம் விதிக்கப்படுகிறது. ஆனால்,பெட்ரோல், டீசல், மது, மின்சாரம் ஆகியவை மட்டும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்படாமல் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே விடப்பட்டுள்ளது.
சிறு ஆன்லைன் வர்த்தகர்களுக்கு கட்டாய ஜிஎஸ்டி பதிவு இல்லை: ஜிஎஸ்டி கவுன்சில் சலுகை
விமர்சனம்
தேசிய அளவில் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய வரிச்சீர்திருத்தம் என்றால் ஜிஎஸ்டிவரிதான். ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தால், மாநிலங்களின் வரிநிர்வாகம் மேம்படும், வரி வருவாய் உயரும் என்று கூறப்பட்டது.
ஆனால், ஜிஎஸ்டி வரி அமலுக்குவந்தபோது, மாநிலங்கள் சுயேட்சையாக நிர்வகித்து,பலவரிகளை வசூலித்து வந்ததுஅனைத்தும் காலியானது. இதனால் மாநிலங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த இழப்பீட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2022, ஜூன் மாதம்வரை தருவோம் என்று மத்தியஅரசு தெரிவித்தது.
பொதுத்துறை வங்கிகளுக்கு முழுக்கு: சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு
இறையாண்மை இழப்பு
ஆனால், மாநிலங்களின் வரிவருவாய் இன்னும் மேம்படாததால் இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டத்தில் இது தொடர்பாக 12க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தும், அதை மத்திய அரசு செவிமெடுக்கவில்லை. ஜிஎஸ்டி வரி வந்தபின் மாநிலங்களின் வரிஇறையாண்மை பறிக்கப்பட்டுவிட்டது என மாநிலங்கள் குற்றம்சாட்டுகின்றன
சுருக்கமான வரலாறு:
மறைமுகவரியில் சீர்திருத்தம் கொண்டுவருவதற்கான காரணகர்த்தாவாக இருந்தது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சியில் நிதிஅமைச்சராக இருந்த வி.பி.சிங்தான். கடந்த1986ம் ஆண்டு, மறைமுகவரிச் சீர்திருத்தம் தொங்கி, திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டுவரி(MODVAT) என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பின் பிரதமராக வந்த பி.வி.நரசிம்மராவ்,அவரின் ஆட்சியில் நிதிஅமைச்சராக இருந்த மன்மோகன் சிங் இருவரும் வாட்வரி குறித்த ஆலோசனையைத் தொடங்கினர்.
NSE-க்கு ரூ.7 கோடி அபராதம்: சித்ரா, சுப்ரமணியனுக்கு ரூ.5 கோடி: SEBI அதிரடி
வாஜ்பாயின் பங்களிப்பு
1999ம் ஆண்டு பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமராக இருந்த வாஜ்பாய் காலத்தில்தான் முதன்முதலில் ஜிஎஸ்டி வரி குறித்த ஆலோசனை நடந்தது. வாஜ்பாய் ஆட்சியி்ல பொருளாதார ஆலோசகர் குழு, ரிசர்வ்வங்கிமுன்னாள் ஆளுநர்கள், ஜஜி படேல், பிமால் ஜலான், சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்டது.
இதன்பின் மே.வங்க நிதிஅமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அசிம் தாஸ்குப்தா தலைமையில் ஜிஎஸ்டி வடிவமைப்புக் குழுவையும் வாஜ்பாய் அமைத்தார்.
நாடுமுழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலானது: பட்டியல் விவரம்?
விஜய் கேல்கர்
2002ம் ஆண்டில் வரிச்சீர்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய விஜய் கேல்கர் தலைமையில் குழுவை பிரதமர் வாஜ்பாய் அமைத்தார். ஜிஎஸ்டி வரியை 12வது நிதிக்குழுவில் நடைமுறைப்படுத்தலாம் என 2005ம் ஆண்டு கேல்கர் குழு பரிந்துரை செய்தது.
சிதம்பரத்தின் ்அறிவிப்பு
அதன்பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முடிந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சிக்கு வந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் நிதிஅமைச்சராக இருந்த ப.சிதம்பரம், 2006ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜிஎஸ்டி வரியை 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்துவது என்று அறிவித்தார்.
2011ம் ஆண்டு மே.வங்கத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்தபின், அசிம் தாஸ்குப்தா ஜிஎஸ்டி வடிவமைப்புக் குழுவிலிருந்து விலகினார். ஏறக்குறைய 80சதவீத ஜிஎஸ்டி வடிவமைப்பு பணியை முடித்துவிட்டதாகத் தெரிவித்தார்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எந்தெந்தப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கும்; வரி குறைக்கப்படும்?
பாஜக எதிர்ப்பு
அதன்பின், கடந்த 2011ம்ஆண்டு, மார்ச் 22ம் தேதி, ஜிஎஸ்டி குறித்த 115வதுசட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்தது. அந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு பரிசீலணைக்கு அனுப்ப வேண்டும் என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக வலியுறுத்தியது.
அப்போது நிலைக்குழு தலைவராக இருந்தவர், தற்போது எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஸ்வந்த் சின்ஹாதான். அப்போது பாஜகவில் யஸ்வந்த்சின்ஹா இருந்தார்.
மோடியின் எதிர்ப்பு
நாடாளுமன்ற நிலைக்குழு 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி மசோதா மீதான அறிக்கையை அளித்தது. இந்தக் குழுவின் அறிக்கைக்கு அக்டோபரில் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அஞ்சல் சேவைக்கும் வரி; மருத்துவமனை நோயாளி அறைக்கும் வரி: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்
பாஜக ஆட்சி
அதன்பின் மத்தியில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சிக்கு வந்தது. 2015ம் ஆண்டு நிதி அமைச்சராகஇருந்த அருண் ஜேட்லி ஜிஎஸ்டி மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து, 2017ம்ஆண்டு ஏப்ரல்1ம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.
மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறினாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியாலும், நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையாலும் நிறைவேறாமல் தாமதமானது.
2017ம் ஆண்டு ஏப்ரல் 6ம்தேதி மாநிலங்களவையிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது. அதன்பின் 2017 ஜூலை 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது.
இந்த ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு தலைவர்கள் பின்புலத்தில் பணியாற்றியுள்ளனர். அவர்கள் குறித்த சுருக்கமான பார்வை
ப.சிதம்பரம்
ஜிஎஸ்டி வரி 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடுமுழுவதும் அமல்படுத்தப்படும் என்று 2006ல் ப.சிதம்பரம் முன்மொழிந்தார். அதற்கான மாநிலஅளவிலான மதிப்புக்கூட்டு வரி தொடர்பான வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டார்.
ரிலையன்ஸ் ஜியோ புதிய இயக்குநராக ஆகாஷ் அம்பானி: முகேஷ் அம்பானி திடீர் விலகல்
விஜய் கேல்கர்
முன்னாள் நிதித்துறை செயலாளர் விஜய் கேல்கர்தான் ஜிஎஸ்டி வரியை கட்டமைத்த பெருமைக்குரியவர். 2009ம் ஆண்டு கேல்கர் தலைமையில் குழுஅமைத்து ஜிஎஸ்டி வரி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.13-வது நிதிக்குழு கேல்கர் தலைமையில் குழுஅமைத்து ஜிஎஸ்டி வரியை முடிவு செய்யக் கூறியது.
அசிம் தாஸ்குப்தா
மே.வங்கத்தின் முன்னாள் நிதிஅமைச்சரும், ஜிஎஸ்டியை வடிவமைத்த குழுவின் தலைவராக இருந்தவர் அசிம் தாஸ்குப்தா. ஜிஎஸ்டி வரியின் வடிவத்தை உருவாக்கியவர் மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி்ன் அசிம்தாஸ் குப்தா என்றால் மிகையில்லை.
பான்-ஆதாரை இணைக்காவிட்டால் இன்றுமுதல் 2 மடங்கு அபராதம்: எவ்வாறு பரிசோதிப்பது?
பிரணாப் முகர்ஜி
காங்கிரஸ் ஆட்சியில் நிதிஅமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது, ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தும் காலக்கெடு முடிந்தது. அதன்பின் புதிய காலக்கெடுவார 2011,ஏப்ரல் மாதத்தை முடிவு செய்தார். ஜிஎஸ்டி வரி சட்டமானதும்,அதற்கு ஒப்புதல் வழங்கியதும் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிதான்.
அருண் ஜேட்லி
2016ம் ஆண்டு முதன்முதலில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை அருண் ஜேட்லிதான் தொடங்கினார். மாநிலங்களின் பல்வேறு கருத்துக்கள், அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஒருங்கிணைத்த பெருமை ஜேட்லிக்கே சேரும். முதன்முதலில் 3 அடுக்காக இருந்த ஜிஎஸ்டிவரி அதன்பின் 5 அடுக்காக ஜேட்லி குழுவால் மாற்றப்பட்டது
ஹக்முக் ஆதியா
ஜிஎஸ்டி வரியை நடைமுறைக்கு கொண்டுவருவதில் முனைப்பாகச் செயல்பட்டவர் முன்னாள் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா. இவே பில், சீர்திருத்தங்கள், ரிட்டன்பைலிங்கில் திருத்தம் ஆகியவற்றை முன்னெடுத்து ஆதியா செயல்படுத்தினார்
படிங்க, பயன்படுத்துங்க! மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு வருமான வரிச் சலுகைகளா?
அரவிந்த் சுப்பிரமணியன்
மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் அரவி்ந்த் சுப்ரமணியன். ஜிஎஸ்டி வரி 15%, 17% அல்லது ஆகிய 18% ஆகிய வீதங்களில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதிஅமைச்சராக இருந்துவரும் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சிலை வழிநடத்தி வருகிறார்கள். கொரோனா போன்ற பல கடினமான நேரங்களை, பொருளாதார வீழ்ச்சியை தேசம் சந்தித்தபோதும், தளராமல் பொருளாதார மேம்பாட்டுக்கான, வளர்ச்சிக்கான முடிவுகளை நிர்மலா சீதாராமன் எடுத்தார். ஜிஎஸ்டி இழப்பீடு காரணமாகத்தான் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நெருடல் ஏற்பட்டுள்ளது