small savings interest rates:ஏமாற்றம்! ppf, nsc உள்பட சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டிவீதத்தில் மாற்றமில்லை

By Pothy RajFirst Published Jul 1, 2022, 8:52 AM IST
Highlights

பிபிஎப், என்எஸ்சி, சுகன்யா சம்மிரிதி திட்டம் உள்ளிட்ட அனைத்து சிறு சேமிப்புகளுக்கும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டிலும் வட்டிவீதத்தை மாற்றாமல்,  முதல் காலாண்டில் வழங்கப்பட்ட வட்டிவீதமே தொடரும் என மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

பிபிஎப், என்எஸ்சி, சுகன்யா சம்மிரிதி திட்டம் உள்ளிட்ட அனைத்து சிறு சேமிப்புகளுக்கும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டிலும் வட்டிவீதத்தை மாற்றாமல்,  முதல் காலாண்டில் வழங்கப்பட்ட வட்டிவீதமே தொடரும் என மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்றீங்களா! இந்த 5 விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்க

சிறுசேமிப்புகளுக்கான வட்டிவீதத்தை மத்திய அரசு காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அறிவித்து வருகிறது. 
தொடர்ந்து 9-வது காலாண்டாக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டிவீதம் மாற்றிஅமைக்கப்படவில்லை. கடந்த 2020-21ம் ஆண்டு முதல்காலாண்டில் வட்டிவீதம் மாற்றப்பட்டது,அதன்பின் மாற்றப்படமலா தொடர்ந்து வருகிறது.

நாட்டில் பணவீக்கம் கடந்த ஜனவரி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பணவீக்கம் 7 சதவீதத்தைக் கடந்து சென்றுவிட்டதால் ரிசர்வ் வங்கி தலையிட்டு வட்டிவீதத்தை உயர்த்தியது. இதுவரை 2 முறை ரெப்போ ரேட்டே உயர்த்தி, 90 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இருப்பினும் பணவீக்கம் 7 சதவீதத்துக்கு கீழ் வரவில்லை.

ஜூலையில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: பட்டியலை வெளியிட்டது RBI

இதனால் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு 2-வது காலாண்டில் வட்டி வீதத்தை மத்திய அரசு உயர்த்தி, பணவீக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் எனபரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் அளிக்கும் வகையில், வட்டிவீதத்தை மாற்றாமல் மத்தியநிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

திட்டங்கள்

வட்டிவீதம் ஜூலை1 முதல் செப்.30வரை

வட்டி கணக்கீடு

சேமிப்புத் திட்டம்

4%

ஆண்டுக்கு ஒருமுறை

1ஆண்டு டெபாசிட்

5.5%

காலாண்டு

2ஆண்டு டெபாசிட்

5.5%

காலாண்டு

3ஆண்டு டெபாசிட்

5.5%

காலாண்டு

5ஆண்டு டெபாசிட்

6.7%

காலாண்டு

5ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்

5.8%

காலாண்டு

5 ஆண்டு மூத்த குடிமக்களுக்கான டெபாசிட்

7.4%

காலாண்டுக்கு ஒருமுறை வழங்கல்

5 ஆண்டு மாதாந்திர வருமானத்திட்டம்

6.6%

மாதந்தோறும் வழங்கல்

5 ஆண்டு தேசிய சேமிப்புத்திட்டம்

6.8%

ஆண்டு வட்டி

பிபிஎப்

7.1%

ஆண்டு வட்டி

கிசான் விகாஸ் பத்திரம்

6.9%(124மாதங்களில் முதிர்ச்சி)

ஆண்டு வட்டி

சுகன்யா சம்ரிதி திட்டம்

7.6%

ஆண்டு வட்டி

மத்திய நிதிஅமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்ட அறிவிப்பில், “ நடப்பு 2022-23 நிதியாண்டின் ஜூலை1 முதல் செப்டம்பர் 30ம் தேதிவரையிலான 2வது காலாண்டிலும் அனைத்து சிறு சேமிப்புகளுக்கான வட்டிவீதம் முதல்காலாண்டில் இருந்ததைப் போலவே தொடரும்” எனத் தெரிவித்துள்ளது.

இதெல்லாம் மாறப்போகுது! ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் மாற்றங்கள் என்ன?

இதனால் பிபிஎப்(7.1%), தேசிய சேமிப்புப் பத்திரம்(என்எஸ்சி)(6.8%) ஆகியவற்றுக்கு வட்டிவீதம் 2வது காலாண்டிலும் மாற்றமில்லாமல் தொடர்கிறது.


 

click me!