dollar to inr today: வரலாற்று வீழ்ச்சி: டாலருக்கு எதிரான இ்ந்திய ரூபாய் 79.11ஆக சரிந்தது: என்ன காரணம்?

Published : Jul 01, 2022, 12:15 PM IST
dollar to inr today: வரலாற்று வீழ்ச்சி: டாலருக்கு எதிரான இ்ந்திய ரூபாய் 79.11ஆக சரிந்தது: என்ன காரணம்?

சுருக்கம்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரைஇல்லாத வகையில் இன்று காலை வர்த்தகத்தில் ரூ.79.11ஆகச் சரிந்தது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரைஇல்லாத வகையில் இன்று காலை வர்த்தகத்தில் ரூ.79.11ஆகச் சரிந்தது. 

இந்திய ரூபாய் மதிப்பு நேற்று வர்த்தகம் முடிவில் ரூ.79.06ஆக இருந்தது, இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், மேலும் சரிந்து ரூ.79.11ஆக வீழ்ச்சி அடைந்தது.

அமெரிக்காவில்அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி தொடர்ந்து வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீ்ட்டை எடுத்து டாலரில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால், ரூபாய் மதிப்பு நெருக்கடிக்கு ஆளாகிறது. டாலரின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து, ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அனைத்து கரன்ஸிகளுக்கும் எதிராக டாலர் வலுப்பெறுவது, இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை எடுத்து வெளியேறுவது அதிகரிப்பது, ரூபாய் மதிப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வரும் நாட்களில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 80ஆக வீழ்ச்சி அடையும் என பல பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். கொரோனாவுக்குப்பின் உலகப் பொருளதாரம் இயல்புக்கு திரும்பி வருகிறது. 

இதனால், உலக நாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், கொரோனா காலத்தில் அளித்த சலுகைளையும் திரும்பப் பெற்று வருகிறார்கள். இதனால் வங்கிகளில் கடனுக்கான வட்டி உயர்ந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி  வட்டிவீதத்தை தொடர்ந்து உயர்த்துவதால், இந்தியச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று, டாலரில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு