chitra: nse: அல்கோ டிரேடிங் வழக்கு: NSE, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு விரட்டி, விரட்டி அபராதம் விதித்த செபி(SEBI)

By Pothy RajFirst Published Jul 1, 2022, 2:37 PM IST
Highlights

தேசியப் பங்குச்சந்தையில் மென்பொருளைப் பயன்டுத்தி, அல்காரிதமிக் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக தேசிய பங்குச்சந்தை, சித்ரா ராம்கிருஷ்ணா உள்ளிட்ட 8 பேருக்கு ரூ.11 கோடி அபராதத்தை பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி விதித்துள்ளது.

தேசியப் பங்குச்சந்தையில் மென்பொருளைப் பயன்டுத்தி, அல்காரிதமிக் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக தேசிய பங்குச்சந்தை, சித்ரா ராம்கிருஷ்ணா உள்ளிட்ட 8 பேருக்கு ரூ.11 கோடி அபராதத்தை பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி விதித்துள்ளது.

அல்காரித்மிக் மென்பொருளை உருவாக்கி என்எஸ்இ தகவல்களைத் திருடியதாக எழுந்த புகாரில் செபி இந்த அபராதங்களை விதித்துள்ளது. 

தேசியப் பங்குச்சந்தை(என்எஸ்இ), என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராம்கிருஷ்ணா, ரவி நரேன் ஆகியோருக்கு தலா ரூ.ஒரு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் நடந்தபோது என்எஸ்இ அதிகாரியாக இருந்த சுப்ரபாத் லாலுக்கு தனியாக ரூ.ஒரு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோலொகேஷன் வழக்கில் ஏற்கெனவே தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.7 கோடி அபராதம், சித்ரா ராம்கிருஷ்ணாவுக்கு ரூ.5 கோடி அபராதம் என செபி நேற்றுமுன்தினம் விதித்தது. இந்நிலையில் நேற்று மென்பொருள் மோசடி வழக்கில் என்எஸ்இ, சித்ராவுக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

என்எஸ்இ அமைப்பின் துணை நிறுவனமான என்எஸ்எஸ்சிஎல் அமைப்பில் தலைவராக இருந்த அஜெய் ஷாவுக்கு ரூ.3 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 

என்எஸ்இக்கு அல்காரித்மிக் மென்பொருளை தயாரித்து, சந்தையில் விற்பனை செய்த இன்போடெக் பைனான்சியல் சர்வீஸுக்கு ரூ.2 கோடி அபராதமும், நிறுவனத்தின் இயக்குநர்கள், சுனிதா தாமஸ், கிருஷ்ணா தாக்லி ஆகியோருக்கு தலா ரூ.ஒரு கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் நடந்தபோது என்எஸ்இ அதிகாரியாக இருந்த சுப்ரபாத் லாலின் மனைவிதான் சுனிதா தாமஸ், அவரின் மைத்துனர்தான் அஜெய் ஷா. என்எஸ்இ அமைப்பின் துணை நிறுவனமான என்எஸ்எஸ்சிஎல் அமைப்பில் தலைவராக இருந்தவர். 

இந்த மென்பொருள் ஒப்பந்தத்தை என்எஸ்இ அமைப்பு, தன்னுடைய சொந்த நிறுவனமான ஐஐஎஸ்எல் அமைப்புக்கு வழங்கியிருக்கலாம் ஆனால், வெளியிலிருந்து வந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்கியது. 

என்எஸ்இ அதிகாரிகளின் பினாமிகளுக்கே இந்த ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல், என்எஸ்இ இருந்துள்ளது. குறிப்பாக அப்போது என்எஸ்இ சிஇஓவாக இருந்த சித்ரா ராம்கிருஷ்ணா, ராம் நரேன் ஆகியோர் கண்டுகொள்ளவில்லை. அஜெய் ஷா, சுனிதா தாமஸ், சுப்ரபாத் லால், இன்போடெக் நிறுவனம் ஆகியவை இரட்டை ஆதாயம் அடைந்தனர் என்று செபி தனது 86 பக்க உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும், “அஜெய் ஷா, சுனிதா தாமஸ், சுப்ரபாத் லால், இன்போடெக் நிறுவனம், கிருஷ்ணா டாக்லி ஆகியோர் கூட்டாக சேர்ந்து, தங்களின் வணிக நலன்களை அடையவே போலித்தனமான டேக்காக்களை எடுத்து, தங்களுடைய எல்கோ மென்பொருளுக்கு வழங்கியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது

மற்ற முதலீட்டாளர்களின் பணத்தின் மூலம் மென்பொருளை உருவாக்கி, அஜெய் ஷா,இன்போடெக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் நியாயமற்ற வகையில் லாபமீட்டியுள்ளனர். ஆனால், மென்பொருள் விவரங்களை பிற முதலீட்டாளர்கள் அனுக முடியாதவகையில்வடிமைத்தனர்” எனத் தெரிவித்துள்ளது.


 

click me!