உலகின் அதிவேக எலெக்ட்ரிக் விமானம் - ரோல்ஸ் ராய்ஸ் அதிரடி

By Nandhini SubramanianFirst Published Jan 21, 2022, 5:28 PM IST
Highlights

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஸ்பிரிட் ஆஃப் இன்னோவேஷன் விமானம் உலகின் அதிவேக எலெக்ட்ரிக் விமானம் என்ற பெருமையை பெற்றது.

ரோல்ஸ் ராய்ஸ் 'ஸ்பிரிட் ஆஃப் இன்னோவேஷன்' உலகின் அதிவேகமான எலெக்ட்ரிக் விமானம் என்ற பெருமையை பெற்றது. இரண்டு புதிய உலக சாதனைகளை படைத்ததை அடுத்து ஸ்பிரிட் ஆஃப் இன்னோவேஷன் அதிவேக எலெக்ட்ரிக் விமானம் என அழைக்கப்படுகிறது. 

மூன்று கிலோமீட்டர்களுக்கும் மேலாக மணிக்கு 555.9 கிலோமீட்டர் வேகத்தில் சென்று ஸ்பிரிட் ஆஃப் இன்னோவேஷன் இந்த சாதனையை படைத்தது. முன்னதாக மணிக்கு 213.04 கிலோமீட்டர் என்பதே அதிவேக சாதனையாக இருந்தது. இந்த எலெக்ட்ரிக் விமானத்திற்கான பரிசோதனை பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாஸ்கொம்ப் டவுன் விமான சோதனை தளத்தில் நடைபெற்றது.  

இரண்டாவது முறை நடைபெற்ற சோதனையில் இந்த எலெக்ட்ரிக் விமானம் மணிக்கு 532.1 கிலோமீட்டர் வேகத்தில் 15 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக சென்றது. முன்னதாக 292.8 கிலோமீட்டர் தான் அதிவேகமாக இருந்தது. இந்த எலெக்ட்ரிக் விமானம் 400 கிலோவாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இரண்டு சாதனைகளையும் ஃபெடரேஷன் ஏரோனாடிக் இண்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இது சர்வதேச வான் விளையாட்டு கூட்டமைப்பின் அங்கம் ஆகும். இந்த அமைப்பு உலகளவில் நடைபெறும் வான்வழி சாதனைகளை அங்கீகரித்து வருகிறது. 

click me!