gold rate today: தங்கம் விலை தொடர் சரிவு: சவரனுக்கு ரூ.120 குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Sep 12, 2022, 10:12 AM IST
Highlights

வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தின் கடைசி நாட்களில் இருந்த சரிவு இந்த வாரத்திலும் நீடித்து வருகிறது

வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தின் கடைசி நாட்களில் இருந்த சரிவு இந்த வாரத்திலும் நீடித்து வருகிறது

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது.  
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,740 ஆகவும், சவரன், ரூ.37,920 ஆகவும் இருந்தது. 

காரின் பின் சீட்டிலும் ‘சீட் பெல்ட் அலாரம்’ கொண்டுவரப்படும்: நிதின் கட்கரி தகவல்

இந்நிலையில் திங்கள்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.4,725ஆகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 சரிந்து, ரூ.37,800ஆக சரிந்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,725ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த வாரத்தில் கடும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்தவாரம்  திங்கள், செவ்வாய் கிழமைகளில் தங்கம்விலை கிராமுக்கு ரூ.28  சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது. ஆனால், புதன்கிழமை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.55 குறைந்தது, சவரனுக்கு ரூ.440 வீழ்ச்சி அடைந்தது. பின்னர் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் தங்கம் விலை உயர்ந்து சனிக்கிழமையன்று,  கிராமுக்கு 28ரூபாயும், சவரனுக்கு 224ரூபாயும் சரிந்துள்ளது. 

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை குறைகூறுவது நியாயமற்றது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

கடந்த திங்கள்கிழமை தங்கம் கிராம் ரூ.4735 என்ற விலையில் தொடங்கி, சனிக்கிழமை ரூ.4740 என்ற அளவில் முடிந்தது. ஏறக்குறைய கிராமுக்கு ரூ.4 மட்டுமே மாறியுள்ளது. சவரன் ரூ.37,888ல் தொடங்கி, இன்று ரூ.37,920ல் முடிந்துள்ளது. இடைப்பட்ட நாட்களில் ரூ.38,144 ஆக உயர்ந்து சரிந்தது. 

தங்கம் விலையில் கடந்த வாரம் ஏற்பட்ட சரிவு இந்த வாரத்திலும் தொடர்ந்து வருகிறது. தங்கம் கிராம் ஒன்றுக்கு இன்று ரூ.15, சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது.   

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிப் பங்குகளை 3 மடங்கு வாங்கிய சில்லரை முதலீட்டாளர்கள்

வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு 10 காசுகள் அதிகரித்து, ரூ.60.50ஆகவும், கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.60,500 ஆகவும் உயர்ந்துள்ளது

click me!