seat belt: காரின் பின் சீட்டிலும் ‘சீட் பெல்ட் அலாரம்’ கொண்டுவரப்படும்: நிதின் கட்கரி தகவல்

Published : Sep 10, 2022, 02:13 PM IST
seat belt: காரின் பின் சீட்டிலும் ‘சீட் பெல்ட் அலாரம்’ கொண்டுவரப்படும்: நிதின் கட்கரி தகவல்

சுருக்கம்

காரின் பின்இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் காரில் அலாரம் பொருத்தப்படும் என்று மத்திய நெடுசாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்

காரின் பின்இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் காரில் அலாரம் பொருத்தப்படும் என்று மத்திய நெடுசாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் சென்றுவிட்டு மும்பைக்கு டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி திரும்பினார். அவருடன் 4 பேர் காரில் பயணித்தனர்.

நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும்.. மத்திய - மாநில அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..

பால்கர் மாவட்டம், சரோட்டி சோதனைச் சாவடியில் இருந்து 20 கி.மீ தொலைவில் சூர்ய நதி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது மிஸ்திரி சென்ற கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

அதாவது சோதனைச் சாவடியிலிருந்து ஏறக்குறைய 9 நிமிடங்களில் 20 கி.மீ தொலைவை மின்னல் வேகத்தில் கார் கடந்தபோது, ஒரு காரை முந்திச்செல்ல முயன்றபோதுவிபத்து நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

இந்த விபத்துக்கான முக்கியக் காரணமாக போலீஸார் தரப்பில் கூறப்படுவது கார் அதிகவேகமாக இயக்கப்பட்டதும், காரில் சைரஸ் மிஸ்திரி பின்னால் அமர்ந்திருந்தும் சீட் பெல்ட் அணியவில்லை என்பதுதான். காரில் சீட் பெல்ட் அணிவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளபோதிலும் அதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவதில்லை. 

நேருவைப்போல் அல்ல! தனது பாரம்பரியத்தை பற்றி பெருமைப்படும் பிரதமர் மோடிதான் ! ஆதித்யநாத் புகழாரம்

காரின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாவிட்டால்வரும் அலாரத்தை நிறுத்தும் மெட்டல் கிளிப்பை வாங்கி, அலாரத்தை நிறுத்தும் நபர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இந்த மெட்டல் கிளிப்பை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டு அமேசான் நிறுவனத்தை மத்தியஅரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், காரில் முன்பக்கம் அமரும் ஓட்டுநர்கள், அருகே அமர்பவர் இருவரும் சீட் அணியாவிட்டால் அலாரம் எழுப்பும் முறை தற்போது இருக்கிறது. இதை பின் இருக்கையில் அமர்பவர்களுக்கும் கட்டாயப்படுத்தும் முறையை அரசு கொண்டுவர உள்ளது.

இது குறித்து மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரப்படும். 

நிதி அமைச்சகம் சுறுசுறுப்பு ! 2023-24ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்டோபரில் தொடக்கம்

காரின் பின் இருக்கையில் அமர்வர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அலாரம்  எழுப்பும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம். ஓட்டுநருக்கு மட்டும் சீட் பெல்ட் கட்டாயமில்லை, உடன் பயனிப்பவர்களும் அணிய வேண்டும். சைரஸ் மிஸ்திரி உயிரிழந்ததைத் தொடர்ந்து சீட் பெல்ட் குறித்த பிரச்சாரத்துக்காக என்னை நடிகர் அக்ஷய் குமார் லண்டனில் இருந்து 3 முறை அழைத்தார்.

 பின் இருக்கையில் அமர்பவர்களுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை. அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், கிரிக்கெட் வீரர்கள் பலரும் சீட் பெல்ட் குறித்த முக்கியத்துவத்துக்காக இலவசமாக பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்
Top 5 Smart Bikes: பட்ஜெட் விலையில் அதிவேக ஸ்மார்ட் பைக்குகள்.! நேர்ல பாத்தாக்க வாங்காம போக மாட்டீங்க.!