sitharaman: விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை குறைகூறுவது நியாயமற்றது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

By Pothy RajFirst Published Sep 8, 2022, 2:29 PM IST
Highlights

நாட்டில் பணவீக்கம் அதிகரித்தபோதிலும்கூட சில மாநிலங்கள் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியைக் குறைக்கவில்லை. அப்படியிருக்கும்போது, விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை குறைகூறுவது நியாயமற்றது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

நாட்டில் பணவீக்கம் அதிகரித்தபோதிலும்கூட சில மாநிலங்கள் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியைக் குறைக்கவில்லை. அப்படியிருக்கும்போது, விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை குறைகூறுவது நியாயமற்றது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

புதுடெல்லியில் சர்வதேச பொருளாதார உறவுளுக்கான இந்திய ஆய்வுக் கவுன்சில் சார்பில்( ஐசிஆர்ஐஇஆர்) “பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடந்தது. அதில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது: 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிப் பங்குகளை 3 மடங்கு வாங்கிய சில்லரை முதலீட்டாளர்கள்

பணவீக்கம் ஒவ்வொரு மாநிலத்துக்கும்ஏற்ப எவ்வாறு மாறுபடுகிறது என்பதை பரவலாக கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம். பணவீக்கம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் உண்மை என்னவென்றால் தேசியஅளவில் இருக்கும் பணவீக்கத்தின் அளவைவிட சில மாநிலங்களில் பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. காரணம் அந்த மாநிலங்கள் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியைக் குறைக்கவில்லை.

நான் வெளிப்படையாகச் சொல்வதாக நினைக்கலாம், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்காமல் இருப்பதால், உணவு தானியங்கள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

பணவீக்கம் நாட்டின்பல்வேறு பகுதிகளில் நிலவியிருந்தாலும்கூட, ஜிஎஸ்டி இருந்தும், ஒரேமாதிரியான சந்தை உருவாகியும், அனைத்து சுங்கவரியையும் நீக்கி உணவுப்பொருட்கள் தடையின்றி செல்ல உதவி செய்தாலும், பணவீக்கம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது

நிதி அமைச்சகம் சுறுசுறுப்பு ! 2023-24ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்டோபரில் தொடக்கம்

தெலங்கானாவில் 8.32%, மேற்குவங்கத்தில் 8.06%, சிக்கிம் 8%, மகாராஷ்டிரா,ஹரியானாவில் 7.7%, மத்தியப்பிரதேசத்தில் 7.52, அசாமில் 7.37%, உத்தரப்பிரதேசத்தில் 7.27%, குஜராத்தில் 7.2% என்றுவேறுபட்ட அளவில்தான் பணவீக்கம் நிலவியது.

நாட்டின் பணவீக்கம் அதிகரிப்புக்கு மாநிலஙக்ளும் ஒருவகையில் மத்தியஅரசுக்கு காரணமாக இருக்கவேண்டும் என்றால், அதைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும், மத்திய அரசும், மாநில அரசுகளும் கூட்டுறவுடன் இணைந்து செயல்படுவதும் அவசியம்.

வரிவருவாய் பங்கீட்டிலும் விவாதம் எழுகிறது. சில மாநிலங்களுக்கு தாங்கள் பொருளாதாரத்துக்கு அதிகமாக பங்களிப்பு செய்கிறோம், ஆனால் குறைவாகவே பங்கீடு பெறுகிறோம் என்று வாதிடுகிறார்கள். 
பணவீக்கம் என்பது மத்தியஅரசு மட்டும் கையாளும் விஷயமல்ல.

காரில் சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் பொருளை விற்காதீர்கள்: அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதபோது, நாட்டின் ஒருபகுதி பணவீக்கத்தின் அழுத்தத்தில் இருந்து விடுபடாமல் தவிக்கிறது. ஒவ்வொருமாநிலமும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளைக் கூறி தங்களின் தரப்பை நியாயப்படுத்தலாம்.

நான் இங்கு அரசியல் பேசவரவில்லை. விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை மட்டும் காரணம் கூற முடியாது. தேசிய சராசரியைவிட பணவீக்கம் அதிகரித்தபோது, சில மாநிலங்கள் பெட்ரோல், டீசலுக்கான வரியைக் குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்தியஅரசுஇருமுறை குறைத்தது. ஆனால், சில மாநிலங்கள் குறைக்கவில்லை. ஆதலால் மத்திய அரசைக் குறைகூறுவது நியாயமற்றது

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

click me!