gold rate today: தங்கம் விலை அதிரடி குறைவு! சவரன் மீண்டும் ரூ.37ஆயிரத்துக்குள் சரிவு! இன்றைய நிலவரம் என்ன?

Published : Sep 10, 2022, 10:08 AM ISTUpdated : Sep 10, 2022, 10:19 AM IST
gold rate today: தங்கம் விலை அதிரடி குறைவு! சவரன் மீண்டும் ரூ.37ஆயிரத்துக்குள் சரிவு! இன்றைய நிலவரம் என்ன?

சுருக்கம்

தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்த நிலையில் இன்று தடாலடியாகக் குறைந்து சவரன் ரூ.37ஆயிரத்துக்குள் சரிந்தது.

தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்த நிலையில் இன்று தடாலடியாகக் குறைந்து சவரன் ரூ.37ஆயிரத்துக்குள் சரிந்தது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.28 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது.  

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை குறைகூறுவது நியாயமற்றது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,768 ஆகவும், சவரன், ரூ.38,144 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில் சனிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 28 குறைந்து ரூ.4,740ஆகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.240 சரிந்து, ரூ.37,920ஆக அதிகரித்துள்ளது. 

கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,740ஆக விற்கப்படுகிறது.

காரில் சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் பொருளை விற்காதீர்கள்: அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. கடந்த வியாழன், வெள்ளி இரு நாட்களில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று திடீரெனச் சரிந்துள்ளது. 

கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் தங்கம்விலை கிராமுக்கு ரூ.28  சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது. ஆனால், புதன்கிழமை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.55 குறைந்தது, சவரனுக்கு ரூ.440 வீழ்ச்சி அடைந்தது. பின்னர் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் தங்கம் விலை உயர்ந்தது. 

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  கிராமுக்கு 28ரூபாயும், சவரனுக்கு 224ரூபாயும் சரிந்துள்ளது. 

ரயில் லேட்டா? ஐஆர்சிடிசி வழங்கும் இந்த உரிமையை கேட்க மறக்காதீங்க

கடந்த திங்கள்கிழமை தங்கம் கிராம் ரூ.4735 என்ற விலையில் தொடங்கி, இன்று ரூ.4740 என்ற அளவில் முடிந்தது. ஏறக்குறைய கிராமுக்கு ரூ.4 மட்டுமே மாறியுள்ளது. அதிகபட்சமாக ரூ.4,768வரை இந்த வாரத்தில் உயர்ந்து குறைந்துள்ளது.  சவரன் ரூ.37,888ல் தொடங்கி, இன்று ரூ.37,920ல் முடிந்துள்ளது. இடைப்பட்ட நாட்களில் ரூ.38,144 ஆக உயர்ந்து சரிந்தது.   

வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு 10 காசுகள் அதிகரித்து, ரூ.60.40ஆகவும், கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.60,400 ஆகவும் உயர்ந்துள்ளது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Rupee Value: இந்திய ரூபாய் மதிப்பு சரிய காரணம் இதுதான்.! இதனால் இவ்ளோ பாதிப்பா?!
Business: மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிப்பது இவ்ளோ ஈசியா?! தித்திக்கும் வருமானம் தரும் தேனீ வளர்ப்பு.!