Cyrus Mistry: Mercedes-Benz:சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது எப்படி? மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் அறிக்கை

By Pothy RajFirst Published Sep 10, 2022, 3:37 PM IST
Highlights

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது குறித்து மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து இடைக்கால அறிக்கை அளித்துள்ளது

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது குறித்து மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து இடைக்கால அறிக்கை அளித்துள்ளது

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று தனது காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு திரும்பினார். அப்போது, கார் பல்கார் மாவட்டத்தில் சாலை நடுவே இருந்த தடுப்பு மீது மோதி விபத்துள்ளானது. இதில் சம்பவவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், 

இந்தவிபத்தில் மிஸ்திரியுடன் சேர்ந்து ஜஹாங்கிர் பாந்தோல் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த மருத்துவர் அனாஹிதா பாந்தோல், அவரின் கணவர் தாரியஸ் பாந்தோல் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.
சரோட்டி சோதனைச் சாவடியில் இருந்து 20 கி.மீ தொலைவில் சூர்ய நதி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது மிஸ்திரி சென்ற கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 

சைரஸ் மிஸ்திரி மரணம் சொல்லும் செய்தி என்ன? காரில் பேக்-சீட் பெல்ட் அவசியமா?

அதாவது சோதனைச் சாவடியிலிருந்து ஏறக்குறைய 9 நிமிடங்களில் 20 கி.மீ தொலைவை மின்னல் வேகத்தில் கார் கடந்தபோது, ஒரு காரை முந்திச்செல்ல முயன்றபோதுவிபத்து நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

இந்த விபத்துக்கான முக்கியக் காரணமாக போலீஸார் தரப்பில் கூறப்படுவது கார் அதிகவேகமாக இயக்கப்பட்டதும், காரில் சைரஸ் மிஸ்திரி பின்னால் அமர்ந்திருந்தும் சீட் பெல்ட் அணியவில்லை என்பதுதான்.

உலகிலேயே  அதிகபாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் எனச் சொல்லப்டும் மெர்சடிஸ் பென்ஸ் GLC220d 4MATIC காரில்தான் விபத்து நடந்தது. சைரஸ் மிஸ்திரி சென்ற மெர்சடிஸ் பென்ஸ் GLC 220d 4MATIC ரக கார் அனைத்து வீல்களும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கார். 

இதன் விலைரூ.68 லட்சம். இந்த காரில் ப்ரீ சேப்டி சிஸ்டம் உள்ளது. அதாவது விபத்து நேரத்தில் முன்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் சீட்பெல்ட் தானாக இறுகிக்கொண்டு அவர்களை முன்னே செல்லவிடாமல் தடுத்துவிடும். 

விபத்து நேரத்தில் மட்டுமல்ல, காரை வேகமாக பிரேக் போட்டு நிறுத்தும்போதுகூட செயல்படும். இது தவிர முழங்கால்களை பாதுகாக்கும் நீ-பேக், கார் ஸ்டீரிங் முகத்தில் மோதாதவகையில் பாதுகாப்பு, டேஷ்போர்ட் மீது மோதி காயம் ஏற்படாமல் தடுக்கும் வசதி, டயர் பிரஷர் கண்காணிப்பு என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. சாதாரண காரைப் போல் அல்ல பென்ஸ் ஜிஎல்சி 220டி கார். இந்த காரில் மொத்தம் 7 ஏர்பேக்குகள் உள்ளன.

காரின் பின் சீட்டிலும் ‘சீட் பெல்ட் அலாரம்’ கொண்டுவரப்படும்: நிதின் கட்கரி தகவல்

இந்த விபத்துக் குறித்து மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் கார் குறித்து விசாரணை நடத்தி முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கை குறித்து பால்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலசாஹேப் பாட்டீல் கூறுகையில் “ மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது குறித்து விசாரித்து தனது இடைக்கால அறிக்கையை போலீஸாரிடம் அளித்துள்ளது. 

அந்த அறிக்கையில் விபத்து ஏற்படும் முன் கார் மணிக்கு 100கி.மீ வேகத்தில் சென்றது. மணிக்கு 89கி.மீ வேகத்தில் சென்றபோது, பாலத்தில் இருந்த தடுப்பு மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. கார் தடுப்பில் மோதுவதற்கு 5 வினாடிகளுக்கு முன்புதான் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியுள்ளார்.

ஆர்டிஓ  அறிக்கையில், காரில் இருந்த 4 ஏர்பேக்குகளும் விபத்து ஏற்பட்டவுடன் விரிந்துவிட்டன எனத் தெரிவித்துள்ளது. வரும் 12ம் தேதி ஹாங்காங்கில் இருந்து மெர்சடீஸ் நிறுவன அதிகாரிகள் வந்து காரை ஆய்வு செய்ய உள்ளனர். 

காரில் சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் பொருளை விற்காதீர்கள்: அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

அதுவரை விபத்தில் சிக்கிய கார், தானேயில் உள்ள ஹிராநந்தனில் உள்ள மெர்சடீஸ் ஷோரூமில் இருக்கும். இந்த காரைஆய்வு செய்து மெர்சடீஸ் நிறுவனம் இறுதி அறிக்கை அளிக்கும்” எனத் தெரிவித்தார்

click me!