கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று சற்று ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று சற்று ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.14 உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.112அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,722 ஆகவும், சவரன், ரூ.37,776 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,736ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ.37,888ஆக ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,736ஆக விற்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்தது. கடந்த திங்கள்கிழமை கிராம் ரூ.4,765ல் தொடங்கியது இன்று வாரத்தின் கடைசி நாளில் ரூ.4,722 ஆகக் குறைந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு, 43 ரூபாய் குறைந்தது. சவரனுக்கு, 344 ரூபாய் குறைந்தது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களுக்குப்பின், தங்கம் விலை சவரன் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் சரிந்தது.
ncrb: 2021ம் ஆண்டில் பிடிபட்ட கள்ளநோட்டுகளில் 60% ரூ.2ஆயிரம் நோட்டுகள்: என்சிஆர்பி தகவல்
இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு 14 உயர்ந்து, சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. தற்போதும் சவரன் 37ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பதால், இந்த வாரத்தில் விலை ஏறி மீண்டும் ரூ.38ஆயிரத்தை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தங்கத்தின் விலை மாற்றத்தில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீத அறிவிப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.
வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசு அதிகரித்து, ரூ.58.50ஆகவும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.58,500 ஆகவும் அதிகரித்துள்ளது.