ஆதார் அட்டை மூலம் வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தின் அளவு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் அட்டை மூலம் வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தின் அளவு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் கார்டு இன்று அனைத்து விதமானபணிகளுக்கும் முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. இந்த ஆதார் கார்டை மொபைல் எண், வங்கி சேமிப்புக் கணக்கு, பான் கார்டு ஆகியவற்றில் இணைத்துள்ளோம்.
இந்த ஆதார் கார்டில் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களான பிறந்த தேதி, முகவரி, பயோமெட்ரிக் விவரங்களான கைவிரல் ரேகை, கண்கருவிழி படம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான 12 இலக்க அடையாள எண் வழங்கப்படுகிறது. இந்த 12 இலக்க எண் மூலம்தான் வங்கி சேமிப்புக் கணக்கு விவரங்களை அறியலாம்.
இதன் மூலம் ஏடிஎம் சென்றோ அல்லது வங்கி்க்கு சென்றோ சேமிப்புக்கணக்கு விவரத்தை அறிய வேண்டியதில்லை. குறிப்பாக முதியோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதநிலையில் இந்த முறை எளிதாக இருக்கும்.
4 விதமான எளிமையான முறையில் வங்கி சேமிப்புக்கணக்கை அறியலாம்.
1. முதலில் செல்போனில் *99*99*1# என்ற எண்ணுக்கு ஆதார் எண்ணில் பதிவு செய்துள்ள உங்கள் செல்போன் எண் மூலம் கால் செய்ய வேண்டும்.
2. 2வதாக 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
3. ஆதார் எண்ணை சரிபார்த்துமீண்டும் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.
4. அதன்பின் குறுஞ்செய்தி மூலம் வங்கியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தின் மதிப்பு தெரியவரும்.
ஆதார் கார்டு வைத்திருப்போர் வங்கி சேமிப்புக் கணக்கு மட்டும் அறிவதோடு மட்டுமல்லாமல், ஒருவருக்கு பணம் அனுப்பலாம், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், அரசின் மானியங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் ஆதார் வழங்கும் யுஐடிஏஐ அமைப்பு, வீட்டுக்கே வந்து ஆதார் எண்ணையும், செல்போன் எண்ணையும் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ஆதார் கார்டு பெற்றவர்கள், மொபைல் எண்ணை இணைக்க பொதுச் சேவை மையத்துக்குஅலையத் தேவையில்லை.
இதற்காக 48ஆயிரம் அஞ்சல ஊழியர்களுக்கு பயிற்சிஅளித்து தயார் செய்துள்ளது. இதற்காக 1.50 லட்சம் அஞ்சல ஊழியர்கள் இரு கட்டங்களாக பயிற்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் வீட்டுக்கே ஆதார் சேவை கிடைக்கும்.