உலகப் பொருளாதாரத் தரவரிசையில் இந்தியாவுக்கும் கீழ் பிரி்ட்டன் வீழ்ச்சி அடைந்தது. 5-வது இடத்தில் இருந்த பிரிட்டன் தற்போது 6-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
உலகப் பொருளாதாரத் தரவரிசையில் இந்தியாவுக்கும் கீழ் பிரி்ட்டன் வீழ்ச்சி அடைந்தது. 5-வது இடத்தில் இருந்த பிரிட்டன் தற்போது 6-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
பிரிட்டனில் அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வாழ்வாதாரச்செலவு போன்றவை பொருளாதார வளர்ச்சியை பின்னோக்கி இழுத்துள்ளன.
பிரிட்டன் 6வது இடத்துக்கு சரிந்ததையடுத்து, பொருளாதார வரிசையில் 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்தியா இந்த தரவரிசை உயர்வைப் பெற்று உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையையப் பெற்றுள்ளது.
டாலரின் அடிப்படையில் கணக்கிட்டால் சர்வதேச செலவாணி நிதியத்தின் கணக்கின்படி முதல் காலாண்டில் இந்தியாவிடம் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது.
பிரிட்டினுக்கு விரைவில் புதிய பிரதமர் வர இருக்கும் நிலையில் பொருளாதார தரவரிசையில்6வது இடத்துக்கு சரிந்தது பெரிய சவாலாக இருக்கும். தற்போது பிரதமராக இருக்கும் போரீஸ் ஜான்ஸனுக்கு அடுத்தார்போல் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி திங்கள்கிழமையன்று தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் லிசி ட்ரஸ் மற்றும் முன்னாள் நிதிஅமைச்சர் ரிஷி சுனக் இடையேகடும் போட்டி நிலவுகிறது
இதில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பொறுப்பு ஏற்பவர் பிரிட்டின் சந்தித்துவரும் 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்திலிருந்து எவ்வாறு மீள்வது என்ற வழியைத் தேட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 2024ம் ஆண்டுக்குள் பொருளாதார மந்தநிலைக்குள் பிரிட்டன் சிக்கும் என்று பேங்க் ஆஃப் இங்கிலாந்து எச்சரித்துள்ளது அதிலிருந்தும் நாட்டை மீட்க வேண்டும். இரு மிகப்பெரிய சவால்களுடன் புதிய பிரதமர் பொறுப்பேற்க உள்ளார்.
whatsapp:meta: ஜூலையில் 24 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்: வாட்ஸ்அப் நடவடிக்கை
இந்தியப் பொருளாதாரம் 2022-23 நிதியாண்டில் 7% வளர்ச்சி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பங்குச்சந்தையில் உள்ள பங்குகள் அனைத்தும் சிறப்பாகச்செயல்படுகின்றன. உலகளவில் பங்குகளின் செயல்பாடு 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளதும் இந்தியாவின் நிலை உயரக் காரணமாகும்.
இது தவிர பிரிட்டனுடன் ஒப்பிடும்போது மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் இந்தியாவிடம் இருக்கும் டாலர் ரொக்கக் கையிருப்பு பிரிட்டனைவிட அதிகமாக இருப்பதும் பிரிட்டன் சரியக் காரணமாகும்.
வரும் 2வது காலாண்டில் பிரிட்டன் பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2வது காலாண்டில் பிரிட்டன் வெறும் 1% மட்டுமே வளரலாம். டாலருக்கு எதிராக பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பும் கடுமையாகச் சரிந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு டாலருக்கு எதிராக 8% வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச செலவாணி நிதியம் கணித்த தரவரிசையில் இந்தியா 11வது இடத்தில் இருந்தது, பிரிட்டன் 5வது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது தலைகீழாக மாறிவிட்டது. பிரிட்டன் 6வது இடத்துக்கு சரிந்தது,11வது இடத்தில் இருந்த இந்தியா 5வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது