
இந்தியப் பொருளாதார வளர்ச்சி ரிசர்வ் வங்கி கணித்து இருப்பதை விட குறைவாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்குப் பின்னர் இன்று பல்வேறு நாடுகள் பொருளாதார தாக்கத்தை எதிர்கொண்டு வந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் நன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், பெரிய அளவிலான வளர்ச்சி இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு இந்தியப் பொருளாதாரம் மட்டும் காரணமில்லை. நம்மைச் சார்ந்து இருக்கும் அல்லது நாம் சார்ந்து இருக்கும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது, அது நமது பொருளாதாரத்திலும் எதிரொலிக்கிறது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது எதிர்காலத்தில் வட்டி விகித கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரலாம் என்று முடிவு எடுத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
gold rate today: தங்கம் விலையில் திடீர் மாற்றம்! உயர்வா, குறைவா? இன்றைய நிலவரம் என்ன?
நடப்பு முதலாம் காலாண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 16.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்து இருந்தது. ஆனால், முந்தைய முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 13.5 சதவீத வளர்ச்சியைத்தான் அடைந்து இருந்தது. ஆனால், தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான முழுமையான வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆனால், பிரபல மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் 2023ஆம் ஆண்டுக்கான ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 சதவீதமாக இருக்கும் என்று குறைத்து கணித்துள்ளது. இது நடப்பு ஆண்டில் 7.7 ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.
அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், பருவமழையில் மாற்றம் மற்றும் உலகளாவிய வளர்ச்சியின் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதார வேகம் குறையும் என்று கணித்துள்ளது. அதேசமயம் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து தொழில் வளர்ச்சி ஏற்படும்போது, இந்த கணிப்பில் மாற்றம் இருக்கலாம் என்பதையும் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.
starbucks: ceo: ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்
இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கியின் கொள்கை கண்காணிப்பு கமிட்டி, வட்டி விகித கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ஆலோசிக்க இருக்கிறது. அப்போது அடிப்படை வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால். வரும் 21 ஆம் தேதி அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை அதிகரித்தால், இதன் தாக்கம் இந்திய வட்டி விகிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தி இருந்தது.
மூடிஸ் கணிப்பு:
இதற்கிடையே, பிரபல மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் நிறுவனம், நடப்பு ஆண்டுக்கான இந்திய பொருளாதார கணிப்பை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இது 7.7 சதவீதமாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது. இதேபோல், சிட்டி குழுமம், எஸ்.பி.ஐ, கோல்டுமேன் சாக்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்திய வளர்ச்சியை குறைத்தே கணித்துள்ளன.
எஸ்.பி.ஐ., நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சியை 7.5 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், சிட்டி குழுமம் 8 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகவும், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், சிட்டி குழுமம் 8 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகவும் குறைத்து கணித்துள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.