
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஏறக்குறைய 24 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக முடக்கப்பட்ட எண்ணிக்கை கடந்த ஜூலை மாதத்தில்தான். மத்திய அரசு கடுமையான தகவல் தொழில்நுட்பச்சட்டங்களைக் கொண்வந்திருப்பதால் ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் நிறுவனம் தனக்கு வந்துள்ள புகார்கள் குறித்தும், அதில் களையப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்.
இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் வரைவு விதிகள் வெளியிடப்பட்டன. பயன்பாட்டாளர்கள் கோரிக்கைகளை விசாரிக்கவும் தனி அதிகாரிகள் நியமிக்கவும் திட்டமிடப்பட்டது. நீதிமன்றம் அனுமதித்தால், ஒரு செய்தியை யார் முதலில் அனுப்பியது என்ற விவரத்தையும் வாட்ஸ்அப் நிறுவனம் கண்டறியும்.
starbucks: ceo: ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்
எந்தவிதமான புகாரும் வராதநிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் 14.20லட்சம் கணக்குகளை இதற்கு முன் தடை செய்துள்ளது. ஜூலை மாதத்தில் 574 புகார்கள் வந்துள்ளன. இந்தியாவில் தொடர்ந்துபோலிச் செய்திகளும், பொய்யான தகவல்களும் பரப்பப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவனம் குற்றம்சாட்டுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 22.10 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.