
தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,710 ஆகவும், சவரன், ரூ.37,680 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.4,695 ஆகச் சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.37,560ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,695ஆக விற்கப்படுகிறது.
lpg cylinder price: lpg price: மிகப்பெரிய நிம்மதி! எல்பிஜி சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைப்பு
இந்தவாரம் தொடங்கியதிலிருந்து தங்கம் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 சரிந்துள்ளது, சவரனுக்கு ரூ.560 வீழ்ச்சி அடைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின், தங்கம் விலை சவரன் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது.
august gst collection :ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 6-வது மாதமாக சாதனை! ஆகஸ்ட் மாத வசூல் 28% அதிகரிப்பு
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் பெரிய ஊசலாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. டாலர் மதிப்பு வலுப்பெறும்போது, முதலீடுகள் அனைத்தும் டாலர் மீது திரும்பும்
அப்போது தங்கத்தின் மீதான முதலீடு, தேவை குறையும் போது விலையில் பெரிய மாற்றம் இருக்கலாம்.
வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. வெள்ளி கிராம் ரூ.58ஆகவும், கிலோ ரூ.58ஆயிரமாக மாற்றமில்லாமல் இருக்கிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.