இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த காரின் விலை சந்திரயான் திட்டத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த பணியை வெற்றிகரமாக செய்து முடித்த விஞ்ஞானிகளின் முயற்சிகளைப் பாராட்டினார். 615 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ பணியை முடித்த போது பல புதிய சாதனைகளை படைத்துள்ளது. எனினும் மற்ற விண்வெளி நிறுவனங்களின் பட்ஜெட்டை விட சந்திரயான் 3ன் பட்ஜெட் மிகவும் குறைவாகவே உள்ளது. சந்திரயான்-3 மிஷனை விட அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கொண்ட திரைப்படங்கள் உள்ளன. மேலும் இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த காரின் விலை சந்திரயான் திட்டத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா?
சந்திரயான்-3 மிஷன் பட்ஜெட் ஒப்பீடு
undefined
சுவாரஸ்யமாக, உலகில் இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த கார், அதாவது 1955 Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe காருடன் ஒப்பிடும்போது, சந்திரயான் 3 திட்டத்தின் பட்ஜெட் மலிவானது. கடந்த ஆண்டு, கார் 135 மில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ. 1,108 கோடிக்கு விற்கப்பட்டது, இது சந்திரயான்-3 மிஷனின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்த காருக்கு முன்பு இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த கார் என்ற சாதனை இதற்கு முன்பு Ferrari 250 GTO என்ற பெயரில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது, இது சந்திரயான் -3 பட்ஜெட்-க்கு நெருக்கமாக சுமார் ரூ.503 கோடிக்கு விற்கப்பட்டது. அதற்கு முன், 2014ல், Mercedes-Benz W196 கார் 29 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.225 கோடி) விற்கப்பட்டது.
உலகின் மிக விலையுயர்ந்த கார்:
1955 ஆம் ஆண்டு Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe ஆனது அந்த நேரத்தில் Mercedes-Benz இன் தலைமைப் பொறியாளராக இருந்த Rudolf Uhlenhaut என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் வெறும் 2 கார்களை மட்டுமே அந்நிறுவனம் தயாரித்திருந்தது. Rudolf அந்த இரண்டு அரிய கார்களில் ஒன்றைப் பயன்படுத்தினார். அரிய Mercedes-Benz 300 SLR ஆனது W 196 R கிராண்ட் பிரிக்ஸ் காரின் சாலைப் பதிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார், ஒரு பெரிய 3.0-லிட்டர் ஸ்ட்ரெயிட்-எட்டு எஞ்சினைக் கொண்டுள்ளது. மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இந்த கார் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.