சிக்கனம் கஞ்சத்தனம் செய்வதுதான் என்று பலரும் நினைத்து வருகிறார்கள். ஆனால், சேமிப்பு என்பது அத்தியாவசியமான செலவு என்பதை அக்டோபர் 31ம் தேதியான உலக சேமிப்பு நாளில் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
சிக்கனம் கஞ்சத்தனம் செய்வதுதான் என்று பலரும் நினைத்து வருகிறார்கள். ஆனால், சேமிப்பு என்பது அத்தியாவசியமான செலவு என்பதை அக்டோபர் 31ம் தேதியான உலக சேமிப்பு நாளில் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
சேமிப்பு, சிக்கனம் என்பது இன்றைய வாழ்க்கைக்கானது அல்ல, அது எதிர்காலத்துக்கானது, எதிர்கால சந்ததியினருக்கானது, எதிர்கால வாழ்க்கை சுபிட்சத்துக்கானது. ஒருவர் எதற்காக வேண்டுமானாலும் சேமிக்கலாம், எதிர்கால கல்விக்காக, சொத்து வாங்க, திருமணம், குழந்தைகளுக்காக என எதற்கு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்: பராக் அகர்வால், விஜயா கடே நீக்கி அதிரடி
சேமிப்பு என்பது பணத்தோடு மட்டும் முடிந்துவிடுவது அல்ல, தண்ணீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு, எரிபொருள் சேமிப்பு என பல வகைகளிலும் சிக்கனம் செய்வதாகும். நாம் இன்று செய்யும் சிக்கனம், சேமிப்பு எதிர்காலத்தை அச்சமின்றி கடந்துசெல்ல உதவும்.
இந்தியாவின் சொத்து என்பது எளிமை,சிக்கனம் என்பதை மகாத்மா காந்தியடிகள் இந்த உலகிற்கு தனது ஆடை மூலம், செலவுகள் மூலம் வாழ்ந்துகாட்டினார். பணச்சிக்கனத்தை வசியப்படுத்த மனச்சிக்கனமும் அவசியமானது. மனச்சிக்கனம் இருந்தால் அதாவது நமக்கும் கீழே உள்ளவர்கள் கோடி என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவில் இருந்தால் நிச்சயமாக மனச்சிக்கனம் வந்துவிடும், அதோடு சேர்ந்து பணச்சிக்கனமும் சேர்ந்துவிடும்.
2023 ம்ஆண்டில் உலகிலேயே அதிகமான ஊதிய உயர்வு இந்தியாவில்தான் இருக்குமாம்! ஆய்வு சொல்கிறது
அக்டோபர் 31ம் தேதிவரும் உலக சிக்கன நாளுக்கு பல்வேறு நாடுகள் விடுமுறையாக அறிவித்து, சிக்கனத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றன.
உலக சேமிப்பு நாள் வரலாறு:
உலக சேமிப்பு நாள் கடந்த 1924ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கியது. இத்தாலியில் உள்ள மிலன் நகரில் முதல்முறையாக சர்வதேச சிக்கன மாநாடு நடந்துத. அதன்பின்புதான் சேமிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.
இத்தாலிய பேராசிரியர் பிலிப்போ ரவிஸா என்பவர்தான் உலக சேமிப்பு நாள் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்தார். இதற்கான தீர்மானம் மாநாட்டில் கொண்டுவரப்பட்டு உலக மக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணரச் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிகளில் மாணவர்களிடையே சிக்கனம்குறித்த விழிப்புணர்வும் ஊட்ட முடிவு செய்யப்பட்டது.
ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி! பொருளாதாரம் வளர மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை
எந்த விதமான திட்டமிடமும், தூண்டுகோலும் இல்லாமல் உலக சேமிப்புநாள் பிறக்கவில்லை. வாழ்க்கையின் உயர் தரத்தைப் பெறுவதற்கும் பொருளாதாரத்தைப் பாதுகாத்து, பணத்தைச் சேமிக்கும் எண்ணத்துக்கு முந்தைய நாட்களில் சில எடுத்துக்காட்டுகள் இருந்தன, உதாரணமாக ஸ்பெயினில் முதல் தேசிய சிக்கன தினம் 1921 இல் கொண்டாடப்பட்டது.
ஜெர்மனியில் மக்கள் சேமிப்பு பழக்கத்தை இழந்துவிட்டார்கள் எனக் கூறி சேமிப்பு குறித்த முக்கியத்துவம் ஊட்டப்பட்டது. மனிதர்கள் வாழ்வில் சேமிப்பு என்பது குகைகளில் வாழ்ந்தபோது, உணவுச் சேமிப்பில் இருந்து தொடங்கிவிட்டது
2ம் உலகப் போரின்போது சேமிப்பு குறித்த விழிப்புணர்வு உச்சத்தில் இருந்தது. போரில் மக்கள் கடுமையாக பாதி்க்கப்பட்டபோது, சேமிக்கும் பழக்கம் இருந்த மக்களே தங்களை காத்துக்கொள்ள முடிந்தது, எதிர்காலச் சிக்கலில் இருந்து பாதுகாப்பாக இருந்தன.
உலகை ஆளும் இந்தியர்கள் ! முக்கிய நிறுவனங்களை வழிநடத்தும் இந்தியர்கள் குறித்த பார்வை
சேமிப்பு நாளின் முக்கியத்துவம்
சர்வதேச சேமிப்பு நாள் என்பது, தனிநபர்கள், குடும்பம், தேசம் சேமிப்பு பழக்கத்தை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. நமக்குக் கிடைக்கும் பணம்என்பது அளவானது எனநினைத்து அத்தியாசவசியங்களுக்கு மட்டும் செலவிட்டு, சேமிக்க வேண்டும். மாறுகின்ற சூழல் கொண்ட உலகில் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம், அதை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் சேமிப்புப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் ஊரடங்கால் ஏராளமான மக்கள் வேலையிழந்தார்கள்,தொழில்கள், வர்த்தகநிறுவனங்கள் மூடப்பட்டன. அந்த நேரத்தில் சிக்கனத்துடன் வாழ்ந்து, சேமிப்பு வைத்திருந்தவர்கள்தான் வாழ்க்கையை பயமின்றி நகர்த்த முடிந்தது நினைவிருக்கும்.
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.126 கோடி ஈவுத்தொகை ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி
ஆதலால், தனிநபர்கள் தங்கள் வருமானம், செலவு குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எதிர்காலத்துக்காக சேமிப்பு என்பதை அத்தியாவசிய செலவாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நிதப்பிரச்சினைகள், பணசிக்கல்கள் வரும்போது, சேமிப்பு மட்டுமை கைகொடுக்கும். தரமான வாழ்க்கை வாழ, மகிழ்ச்சியாகவும், அச்சமின்றி வாழவும் சேமிப்பு உதவுகிறது. கடன் வாங்குவதைத் தவிர்த்து, மனஅழுத்தத்தை தவிர்த்து, எதிர்பாரா உடல் நலச் செலவுகளை சமாளிக்கவும் சேமிப்பு உதவுகிறது.
இந்த சேமிப்பு நாளில் குழந்தைகளுக்கு பிக்கி பேங்க் மூலம் சேமிப்பு பழக்கத்தை ஊட்ட வேண்டும் இதன் மூலம் எதிர்காலத்தில் சேமிப்பின் அவசியத்தை குழந்தைகள் உணர்ந்து சிக்கனமாக இருப்பார்கள். பணம் என்பது இன்றைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல எதிர்கால வாழ்க்கைக்கும் தேவை என்பதை குழந்தைகள் உணர்வார்கள்
2022 கருத்தாக்கம்
2022ம் ஆண்டு உலக சேமிப்பு நாளின் கருத்தாக்கம் என்பது “ சிறந்த எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்கத் தயாராகுங்கள்” என்பதாகும். சிறந்த எதிர்கால வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் கண்டிப்பாக சிக்கன வாழ்க்கையையும், சேமிப்பையும் கடைபிடிக்க வேண்டும்.
ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை
சேமிப்புக்கு அடிப்படை சிக்கனம். சிக்கனம் கஞ்சத்தனம், பணத்தைசெலவழிக்காமல் இருப்பது அல்ல. நமக்குரிய அத்தியாவசியச் செலவுகளையும் சுருக்கிக்கொண்டால் வருவது சேமிப்பாகும். நமக்கு கிடைக்கும் வருமானத்தில் முதலில் சேமிப்புக்குரிய தொகையை எடுத்துவைத்து
அதன்பின் செலவு செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டால் எதிர்காலத்தை நினைத்து பயப்பட தேவையில்லை.ஆதலால் சேமிப்புக்கு அடிப்படை சிக்கனம், சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிக்க முடியும். எதிர்காலத்தை பற்றி அச்சமின்றி வாழ, சிறந்த வாழ்க்கைத்தரம் அமைய சேமிப்பு அவசியமாகும்.