
மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் தொடர்ந்து 2வது நாளாக இன்று ஏற்றத்துடன் முடிந்தன.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 186 புள்ளிகளும் நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்தநிலையில் வர்த்தகத்தை தொடங்கின. இந்த உற்சாகம் தொடர்ந்து நீடித்ததால் வர்த்தகம் ஏற்றத்துடன் நடந்தது
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60,054 புள்ளிகளை கடந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர். வங்கித்துறை பங்குகள் அதிக லாபத்துக்கு கைமாறின, நேற்று லாபம் ஈட்டிக்கொடுத்த உலோகப் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்ன. டாக்டர் ரெட்டீஸ், மாருதி சூஸுகியின் காலாண்டு முடிவுகள் சாதமாக இருக்கும் என முதலீட்டாளர்கள் நம்பியதால் உற்சாகத்துடன் வர்த்தகம் நடந்தது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்: பராக் அகர்வால், விஜயா கடே நீக்கி அதிரடி
சர்வதேச சூழல் சாதகமாக இல்லாவிட்டாலும் உள்நாட்டு பங்குகள், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வர்த்தகத்தை நடத்தினர். இதனால் மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்ந்து, 59,960 புள்ளிகளில் முடிந்து, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து, 17,787 புள்ளிகளில் நிலைபெற்றது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 20 நிறுவனப் பங்குகள் விலை ஏற்றத்துடன் முடிந்தன, 10 நிறுவனப் பங்குகள் மதிப்பு சரிந்தது. என்டிபிசி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பவர்கிரிட், டைட்டன், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்துடன் முடிந்தன. டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரிந்தன.
2வது நாளாக உயர்வுடன் தொடங்கிய பங்குசந்சந்தை: 60ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல், எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை லாபமீட்டன. உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் சரிவில் முடிந்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.