தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது, 2 நாட்களில் சவரனுக்கு ரூ.240 வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது, 2 நாட்களில் சவரனுக்கு ரூ.240 வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 10ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,745 ஆகவும், சவரன், ரூ.37,960 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.160 வீழ்ச்சி: இன்றைய விலை நிலவரம் என்ன?
இந்நிலையில் வெள்ளிக்கிழமை(இன்று) காலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, 4,735 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.80 சரிந்து, ரூ.37,880ஆகவும் இருக்கிறது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,735க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதிலிருந்து மாற்றமில்லாமல் இருந்தது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. ஆனால், கடந்த இரு நாட்களாக தங்கம் விலை சரியத் தொடங்கியுள்ளது,2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
தங்கம் வாங்க பொன்னான நேரம்! 5வது நாளாக மாற்றமில்லை! இன்றைய விலை நிலவரம் என்ன?
அமெரிக்கப் பொருளாதாரம் மந்நதநிலைக்குச் செல்லாது என்ற தகவலும், பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிவீதம் பெரிதாக உயர்த்தப்படாது என்ற செய்தியும் பங்குச்சந்தையில் ஏற்றத்தை அளித்துள்ளது.
இந்த தகவல் தங்கம் விலையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியும்
வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ரூ.63.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,700 ஆகவும் விற்கப்படுகிறது