Today Stock Market: பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்வு: உலோகப் பங்குகள் ஆதிக்கம்

By Pothy RajFirst Published Oct 27, 2022, 5:27 PM IST
Highlights

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன. உலோகப் பங்குகளும், ரியல்எஸ்டேட் பங்குகளும் அதிக லாபம் ஈட்டின.

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன. உலோகப் பங்குகளும், ரியல்எஸ்டேட் பங்குகளும் அதிக லாபம் ஈட்டின.

பங்குச்சந்தையில் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கும் முன்பே சென்செக்ஸ், நிப்டி ஏற்றத்துடன் இருந்தது. வர்த்தகம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டவுடன் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 388 புள்ளிகளும் , தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 97 புள்ளிகள் அதிகரித்தன.

 

டவ் ஷாம்பு உள்பட ட்ரை ஷாம்பு வகைகளை திரும்பப் பெறும் யுனிலீவர் நிறுவனம்: என்ன காரணம்?

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 25 நிறுவனப் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்தின. சந்தையில் காலையில்காணப்பட்ட இந்த உற்சாகமான போக்கு பிற்பகலில் சரியத் தொடங்கியது. இருப்பின் சரிவிலிருந்து மெல்ல மீண்டு, மாலையில் ஏற்றத்துடன் வர்த்தகம் முடிந்தது.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 212 புள்ளிகள் ஏற்றத்துடன், 59,756 புள்ளிகளில் நிறைவடைந்தது, தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 80.60 புள்ளிகள் உயர்ந்து, 17,736 புள்ளிகளில் நிலைபெற்றது.

டவ் ஷாம்பு உள்பட ட்ரை ஷாம்பு வகைகளை திரும்பப் பெறும் யுனிலீவர் நிறுவனம்: என்ன காரணம்?

ஜியோஜித் நிதிச்சேவை நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் வினோத் நாயர் கூறுகையில் “ உலகச் சந்தையில் பலவீனமான போக்கு, கச்சா எண்ணெய் விலை  போன்றவை உள்நாட்டு சந்தையில் லாபம் ஈட்ட சவாலாக உள்ளன. அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களின் காலாண்டு நிலவரங்களும் எதிர்பார்த்த வகையில் இல்லை. ஐரோப்பிய மத்திய வங்கியும், 75 புள்ளிகள் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சாதகமாக அமையும்”எனத் தெரிவித்தார்

தேசியப் பங்குச்சந்தை நிப்டியில் ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஹின்டால்கோ, டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய அதிக லாபம் ஈட்டின. பஜாஜ் பைனாஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, நெஸ்ட்லே இந்தியா ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தன.

இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.126 கோடி ஈவுத்தொகை ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி

நி்ப்டியில் எரிசக்தி, உலோகம், கட்டுமானத்துறை, எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி ஆகிய துறைப் பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 

ஆசியப் பங்குச்சந்தையில் சியோல், ஹாங்காங், டோக்கியோ, ஷாங்காய் ஆகிய சந்தைகள் சரிவில் முடிந்தன. 

மும்பைபங்குச்சந்தையில் உலோகம், ரியல்எஸ்டேட், மின்சக்தி, எண்ணெய் மற்றும் எ்ரிவாயு, தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் லாபத்தில் முடிந்தன. கனரா வங்கி, பார்தி ஏர்டெல், சிப்லா, கர்நாடகா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, சவுத் இந்தியன் வங்கி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் லாபத்தை ஈட்டின
 

click me!