2023 ம்ஆண்டில் உலகிலேயே அதிகமான ஊதிய உயர்வு இந்தியாவில்தான் இருக்குமாம்! ஆய்வு சொல்கிறது

By Pothy RajFirst Published Oct 27, 2022, 3:17 PM IST
Highlights

2023ம் ஆண்டில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகபட்சமாக 4.6 சதவீதம் ஊதிய உயர்வு இருக்கும் என்று வேலைத்திறன் நிறுவனமான இசிஏ இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகபட்சமாக 4.6 சதவீதம் ஊதிய உயர்வு இருக்கும் என்று வேலைத்திறன் நிறுவனமான இசிஏ இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான ஊதிய உயர்வு குறித  டாப் 10 நாடுகளில் ஆசியாவில் உள்ள 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், 2022ம் ஆண்டில் சராசரியாக 3.8 சதவீதம் ஊதியம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜல் ஜீவன் மிஷன்: 100% குடிநீர் இணைப்பு வழங்கிய 7-வது மாநிலம் குஜராத்: தமிழகம் எந்த இடம் ?

உலகளவில் 68 நாடுகளில் உள்ளநகரங்களில் செயல்படும் 360 பன்னாட்டு நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்கள்,புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இசிஏ இன்டர்நேஷனல் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்தியா, வியட்நாமில் 4சதவீதம் வரை ஊதிய உயர்வு 2023ம் ஆண்டில் இருக்கும். சீனாவில் 3.8 சதவீதமும், பிரேசிலில் 3.4 சதவீதமும் ஊதிய உயர்வு இருக்கும். சவுதி அரேபியாவில் 2.3 சதவீதம்ஊதிய உயர்வு இருக்கும்

பாகிஸ்தானில் மைனஸ் 9.9 சதவீதம் ஊதியக் குறைவு ஏற்படும், அதைத் தொடர்ந்து கானா(-11.9%), துருக்கி(-14.4), இலங்கை(-20.50%)ஊதியக் குறைவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி! பொருளாதாரம் வளர மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை

உலகளவில் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் உண்மையான ஊதிய உயர்வு என்பது 37 சதவீத நாடுகளில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊதிய உயர்வு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக பணவீக்கமும் இருக்கிறது. இதில் பணவீக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது ஐரோப்பிய மண்டலம்தான். 

கடந்த 2000ம் ஆண்டுக்குப்பின் மிகமோசமாக பாதிக்கப்படுவது பிரிட்டனில் உள்ள ஊழியர்கள்தான். 3.5 சதவீதம் ஊதியம் உயர்வு இருந்தாலும், பணவீக்கத்தின் அடிப்படையில் ஒப்பிடும்போது, 5.6 சதவீதம் குறைவாகும். அதாவது 9.1 சதவீதம் பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் இது மிகக்குறைவாக இருக்கும்.
அமெரிக்காவில் பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் உண்மையான ஊதி உயர்வு 4.5 சதவீதம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!