Share Market Today: காளையின் ஆதிக்கத்தில் பங்குசந்தை: சென்செக்ஸ் 380 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு!உலோகம் ஏற்றம்

By Pothy RajFirst Published Oct 27, 2022, 9:37 AM IST
Highlights

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் இன்று காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 380 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் இன்று காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 380 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

தீபாவளியன்று முகூர்த்த வர்த்தகத்துக்குப்பின் செவ்வாய்கிழமை தேசிய பங்குசந்தையும், மும்பைப் பங்குசந்தையும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 288 புள்ளிகள் வரை சரிந்தது. பங்குச்சந்தைக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து இன்று வர்த்தகம் நடந்தது.

வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன்பே சென்செக்ஸ், நிப்டி ஏற்றத்துடன் இருந்தது. வர்த்தகம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டவுடன் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து 59,932 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 97 புள்ளிகள் அதிகரித்து 17,754 புள்ளிகளிலும் வர்தத்கம் நடந்து வருகிறது. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 25 நிறுவனப் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன, மீதமுள்ள 5 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன. ஹெச்டிஎப்சி பங்குகள் 2 சதவீதம் உயர்ந்த நிலையில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி! பொருளாதாரம் வளர மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை

மகிந்திரா அன்ட் மகிந்திரா, என்டிபிசி, ஐடிசி,பவர்கிரிட், இன்போசிஸ் பங்குகள் சரிவில் உள்ளன. 
ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் இன்று காணப்பட்டது. ஜப்பானின் நிக்கி 225 புள்ளிகள் உயர்விலும், டாபிக்ஸ் 0.3 சதவீதம் சரிவிலும், ஹாங்காங் சந்தை, சீன சந்தை சரிவிலும் முடிந்தன, இருப்பினும் தகவல்தொழில்நுட்ப பங்குகள் உயர்ந்துள்ளன

தேசியப் பங்குச்சந்தையில் உலோகம், தனியார் வங்கி, அரசு வங்கி, மருந்துத்துறை, தகவல்தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் என அனைத்து துறைகளும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன, குறிப்பாக உலோகத்துறை பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்குவதால், உயர்ந்த நிலையில் உள்ளன.

உலகை ஆளும் இந்தியர்கள் ! முக்கிய நிறுவனங்களை வழிநடத்தும் இந்தியர்கள் குறித்த பார்வை

எஸ்பிஐ கார்டு, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, டாடா கெமிக்கல்ஸ், வி கார்டு இன்டஸ்ட்ரீஸ், பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ், ஆதித்யா பிர்லா ஆகிய நிறுவனங்களின் 2ம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளன. பிற்பகலுக்கு பின் வங்கித்துறை பங்குகளில் மாற்றம் வரலாம் எனத் தெரிகிறது.
 

click me!