Bank Strike 2022: வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

Published : Oct 26, 2022, 04:58 PM IST
Bank Strike 2022: வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சுருக்கம்

வங்கி ஊழியர்கள்  வரும் நவம்பர் 19ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அனைத்து இந்திய வங்கி ஊழியரக்ள் கூட்டமைப்பு(ஏஐபிஇஏ) தெரிவித்துள்ளது.

வங்கி ஊழியர்கள்  வரும் நவம்பர் 19ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அனைத்து இந்திய வங்கி ஊழியரக்ள் கூட்டமைப்பு(ஏஐபிஇஏ) தெரிவித்துள்ளது.

வங்கி ஊழியர்கள் சங்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் உறுப்பினர்கள் அதிகாரிகளால் பழிவாங்கப்படுவதைக் கண்டித்துஇந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக அனைத்து இந்திய வங்கி ஊழியரக்ள் கூட்டமைப்பு தலைவர் சி.ஹெச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

வெள்ளி நகை வாங்க போறீங்களா..? அதற்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு போங்க.!

இது குறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் சி.ஹெச். வெங்கடாச்சலம் கூறுகையில் “ வங்கி ஊழியர்கள் சங்கங்களில் ஆர்வத்துடன் செயல்பட்டால் அவர்களை வங்கி நிர்வாகம் மறைமுகமாக தண்டிக்கிறது, பழிவாங்குகிறது. 

சமீப காலமாக, இந்த தாக்குதல் அதிகரித்து வருகிறது, எங்கு பார்த்தாலும் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஊழியர்கள் மீதான தாக்குதலில் ஒரு வகை இருக்கிறது, முட்டாள்தனமும் இருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற விஷயங்களை நாங்கள் எதிர்த்து வருகிறோம், அனைத்து வடிவங்களிலும் இதை முழுமையாக எதிர்த்து வருகிறோம்.

உலகை ஆளும் இந்தியர்கள் ! முக்கிய நிறுவனங்களை வழிநடத்தும் இந்தியர்கள் குறித்த பார்வை

இந்த தாக்குதலைக் கண்டித்து நவம்பர் 19ம் தேதி வங்கி வேலை நிறுத்தம் செய்ய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சோனாலி வங்கி, எம்யுஎப்ஜி வங்கி, பெடரல் வங்கி, ஸ்டான்டர்ட் சாராட்டட் வங்கி ஆகியவற்றில் பணியாற்றிய ஏஐபிஇஏ யூனியன் தலைவர்கள், நிர்வாகிகள் தண்டிக்கப்பட்டனர், பணிநீக்கப்பட்டனர். 
பேங்க் ஆப் மகராஷ்டிரா யூனியன் உரிமைகளை ஊழியர்களுக்கு மறுக்கிறது, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, ஐடிஐபி வங்கி ஆகியவை பணிகளை வெளியாட்கள் மூலம் செய்யத் தொடங்கிவிட்டன.

ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி! பொருளாதாரம் வளர மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை

என்னைப்பொறுத்தவரை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா காட்டாட்சி நடத்தி கண்மூடித்தனமாக ஊழியர்களை இடமாற்றம் செய்கிறது. இருதரப்பு தீர்பு, வங்கி அடிப்படையிலான தீர்வை மீறி, 3300 கிளரிக்கல் ஊழியர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு முன்பாக பலகட்ட போராட்டங்களை நடத்துவோம்” எனத் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Rupee Value: இந்திய ரூபாய் மதிப்பு சரிய காரணம் இதுதான்.! இதனால் இவ்ளோ பாதிப்பா?!
Business: மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிப்பது இவ்ளோ ஈசியா?! தித்திக்கும் வருமானம் தரும் தேனீ வளர்ப்பு.!