
தங்கம் விலை கடந்த 5வது நாளாக எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நீடித்த அதேவிலையான, கிராம் ரூ.4,740 ஆகவும், சவரன், ரூ.37,920 ஆகவும் இன்று காலையும் நீடிக்கிறது. தங்கம் விலையில் கடந்த 22ம் தேதி முதல் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 22ம் தேதி முதல் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது
தங்கம் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் என்ன?
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,740க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த வாரம் சனிக்கிழமையன்று, சவரனுக்கு ரூ.600 அதிகரித்தது. அதன்பின் தீபாவளிப் பண்டிகை, தந்தேராஸ் முடிந்தபின்பும் தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. தங்கம் விலை 5வது நாளாக மாற்றமில்லாமல் நீடித்து வருவதால் தங்கம் வாங்க நினைப்போருக்கு இது சரியான நேரமாகும். அடுத்துவரும் நாட்களில் தங்கம் விலை உயரலாம் அல்லது குறையலாம், ஆனால், அதுவரை காத்திருக்காமல் தங்கம் வாங்க நினைப்பவர்கள் தற்போது இருக்கும் விலையில் வாங்குவது சிறப்பாகும் என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தந்தேராஸ் பண்டிகையில் ரூ.40ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும்: சிஏஐடி எதிர்பார்ப்பு
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டம் இந்த வாரம் நடக்கிறது. அந்நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படும் நிலையில் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ரூ.64.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.64,000 ஆகவும் விற்கப்படுகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.