Dove Shampoo Recall: டவ் ஷாம்பு உள்பட ட்ரை ஷாம்பு வகைகளை திரும்பப் பெறும் யுனிலீவர் நிறுவனம்: என்ன காரணம்?

By Pothy RajFirst Published Oct 26, 2022, 9:44 AM IST
Highlights

எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பான டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளை அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பான டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளை அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டவ் உள்ளிட்ட ஷாம்பு வகைகளில், பென்ஜென் என்ற மூலப்பொருளால் ரத்தப் புற்றுநோய், லுகிமேனியா நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதையடுத்து, ஷாம்பு பிராண்டுகளை திருமப்ப் பெறுவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணம், தங்கக் காசு! கவுன்சிலர்களுக்கு 'காஸ்ட்லி கிப்ட்' கொடுத்த கர்நாடக அமைச்சரால் சர்ச்சை

டவ் ஷாம்பு மட்டுமல்லாது, நெக்சஸ்(nexus), சுவாவ்(Suave), டிரஸ்மீ(Tresemme), டிகி(Tigi) ஆகிய ட்ரை ஷாம்பு(Dry Shampoo) வகைகளையும் யூனிலீவர் நிறுவனம் திரும்பப் பெறுகிறது என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டு அக்டோபருக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே யுனிலீவர் நிறுவனம் திரும்பப் பெறுகிறது. யூனிலீவர் தனது பொருட்களை திருமப்ப் பெறுதற்கு 18 மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு பொருட்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.126 கோடி ஈவுத்தொகை ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி

ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நியூட்ரோஜினா, எட்ஜ்வெல் பெர்சனல் கேர் பனானா போட், பியர்ஸ்சர்ப் காப்பர்டோன் ஆகிய பொருட்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களில் ரத்தப் புற்றுநோய், லுகிமேனியா உருவாக்கும் பென்ஜின் இருப்பது அமெரிக்காவின் கனெக்ட்கட் நகரில் உள்ள வலிசியூர் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ஏரோசோல் ட்ரை ஷாம்பு தொடர்பான 19 வகை பொருட்களையும் யுனிலீவர் நிறுவனம் அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திரும்பப் பெறப்பட்ட பொருட்களால் எந்த பாதிப்பும் இதுவரை நுகர்வோர்களுக்கு ஏற்படவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த பொருட்களை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைகளில் தங்களின் ஷாம்பு வகைகளையும் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு உரிமையாளர்களுக்கும் யுனிலீவர் கேட்டுக்கொண்டுள்ளது.

ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை

யுனிலீவர் நிறுவனம் சுயேட்சையாக நிறுவனத்துக்குள் உள்விசாரணை நடத்தியது. அதில், ஏரோசேல் கேன்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அதிக அளவு பென்ஜீனுக்கு ஆதாரமாக இருப்பதைக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பொருட்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளது அமெரிக்காவில் மட்டும்தான். இந்தியாவில் இல்லை. இந்தியாவில் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் வர்த்தகம் எந்த அளவிலும் பாதிப்பு இல்லை, டவ் ஷாம்பு உள்ளிட்ட வகைகள் தொடர்ந்து விற்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் யுனிலீவர் நிறுவனம் தனது ஷாம்பு வகைகளை திருமப் பெற்றுள்ளதால் இந்தியாவில் அந்த நிறுவனத்துக்கு எந்ந பாதிப்பும் இல்லை.

 
 

click me!