கடந்த 7 நாட்களாக உயர்வுடன் வர்த்தகத்தை நடத்திய, மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் இன்று சரிவுடன் முடித்தன.
தீபாவளிக்கு மூகூர்த்த வர்த்தகத்தின் போது மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 60ஆயிரம் புள்ளிகளை எட்டியது, நிப்டியும் 17600 புள்ளிகளுக்கு மேல் சென்றது. ஆனால், இன்று முற்றிலும் தலைகீழாக மாறியது.
தங்கம் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் என்ன?
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகளும் சாதகமான போக்குடன் இருந்தன. ஆனால், சர்வதேச சந்தை நிலவரம் சாதகமாக இல்லை.
குறிப்பாக ஆசியப்பங்குச்சந்தை பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன. அமெரிக்க பெடரல் வங்கி இந்த வாரம் கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், ஆசிய சந்தையில் ஊசலாட்டம் காணப்பட்டது.
தந்தேராஸ் பண்டிகையில் ரூ.40ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும்: சிஏஐடி எதிர்பார்ப்பு
இந்திய சந்தையில் வர்த்தகம் காலையில் சாதகமான போக்குடன் தொடங்கினாலும் பிற்பகலில் வர்த்தகத்தில் ஊசலாட்டம் காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டியதால் சரியத் தொடங்கியது.
வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 288 புள்ளிகள் குறைந்து, 59,544 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 74 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 17,656 புள்ளிகளில் நிலைபெற்றது.
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் 10 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன மற்றவை சரிவில் முடிந்தன. டெக்மகிந்திரா, மாருதி சுஸூகி, லார்சன் அன்ட் டூப்ரோ, டாக்டர்ரெட்டீஸ், என்டிபிசி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, இன்போசிஸ்,அல்ட்ரா சிமெண்ட் ஆகிய நிறுவனப் பங்குகள் 0.6 முதல் 3 சதவீதம் வரைலாபமீட்டன.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு பச்சைக் கொடி! தடையை நீக்கியது ரிசர்வ் வங்கி
டாடா ஸ்டீல், விப்ரோ, டிசிஎஸ், பவர் கிரிட்,பார்திஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, டைட்டன்,ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, ஏசியன்பெயின்ட், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஒன்றுமுதல் 3 % வரை சரிவில் முடிந்தன
பங்குச்சந்தையில் துறைவாரியாக பார்க்கும்போது, பொதுத்துறை வங்கி பங்குகள் 3.5 சதவீதம் லாபமீட்டின, முதலீட்டுப் பொருட்கள், ஆட்டமொபைல் தலா ஒரு சதவீதமும், வேகமாக நுகரும்பொருட்கள் ஒரு சதவீதம் சரிவுடன் முடிந்தன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.