கடந்த 3-நாட்களாக தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது.
கடந்த 3-நாட்களாக தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,740 ஆகவும், சவரன், ரூ.37,920 ஆகவும் இருந்தது.இதை விலையில் இன்றும் நீடிக்கிறது. தங்கம் விலையில் எந்த மாற்றமும்இல்லை.
Dhanteras 2022: தந்தேராஸ் பண்டிகையில் ரூ.40ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும்: சிஏஐடி எதிர்பார்ப்பு
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,740க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்தவாரத்தில் புதன்கிழமையிலிருந்து படிப்படியாக சரிந்து, சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் சனிக்கிழமையன்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்தது.
தங்கம் விலை கிடுகிடு உயர்வு!ஒரேநாளில் சவரனுக்கு இவ்வளவு அதிகமா! வெள்ளி விர்ர்!இன்றைய நிலவரம்?
தீபாவளிப் பண்டிகை, தந்தேராஸ் நெருங்கியதையடுத்து, மக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வத்தால் திடீரென விலை உயர்ந்தது. தங்கம் விலையும் சவரன் ஏறக்குறைய ரூ.38ஆயிரத்தை நெருங்கியது.
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டம் இந்த வாரம் நடக்கிறது. அந்நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படும் நிலையில் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தேராஸ் பண்டிகை 2022: பேடிஎம் மூலம் கிப்ட் கார்டில் தங்கம் வாங்குவது எப்படி?
வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.63.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.63,500 ஆகவும் விற்கப்படுகிறது