இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் இருந்து 2022ம் ஆண்டில் ஈவுத் தொகையா ரூ.126 கோடியை பிரிட்டன் பிரதமராக வரவுள்ள ரிஷி சுனக் மனைவி, அக்ஷதா மூர்த்தி பெற்றுள்ளார்.
இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் இருந்து 2022ம் ஆண்டில் ஈவுத் தொகையா ரூ.126 கோடியை பிரிட்டன் பிரதமராக வரவுள்ள ரிஷி சுனக் மனைவி, அக்ஷதா மூர்த்தி பெற்றுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இன்போசிஸ் நிறுவனத்தில் அக்ஷதா மூர்த்தி வைத்திருக்கும் பங்குகளுக்கு இணையாக ஈவுத்தொகை வழங்கப்பட்டது.
Rishi Sunak pm: ‘ டீடோட்லர்’ரிஷி சுனக்! அறிந்திராத சில ஸ்வரஸ்யத் தகவல்கள்
நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியிடம் 0.93 சதவீதம் அதாவது 3.89 கோடி பங்குகள் செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி உள்ளன. அக்ஷதா வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு ரூ.5,956 கோடியாகும்.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகத்தின் போது இன்போசிஸ் பங்கின் விலை ரூ.1,527.40க்கு விற்பனையாது குறிப்பிடத்தக்கது. 2020-21ம் ஆண்டு மே31-ம்தேதியின்படி இன்போசிஸ் நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.16 ஈவுத்தொகையாக வழங்குகிறது. நடப்பு ஆண்டில் இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.16.50 வழங்கப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால் ஒரு பங்கிற்கு ரூ.32.50 வீதம், அக்ஷதா மூர்த்திக்கு ரூ.126.61 கோடி கிடைக்கும்.
இந்தியாவில் பங்குதாரர்களுக்கு சிறந்த ஈவுத்தொகை அளிக்கும் நிறுவனங்களில் இன்போசிஸ் முக்கியமானது. 2021ம் ஆண்டில் ஒரு பங்கிற்கு ரூ.30 வழங்கப்பட்டது, அந்த ஆண்டில் ரூ.119.50 கோடியை அக்ஷதா பெற்றார்.
வரலாறு படைக்கிறார் ரிஷி சுனக்! பிரிட்டன் பிரதமராக வரும் 28ம் தேதி பதவி ஏற்பு
பிரிட்டன் பிரதமராக வரும் 28ம் தேதி அக்ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக் பதவி ஏற்க உள்ள நிலையில் இந்த ஈவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அக்ஷதா மூர்த்தி கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர். பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்த அக்ஷதா, கலிபோர்னியாவில் உள்ள கிளார்மோன்ட் மெக்கென்ன கல்லூரியில் படித்தார், அங்கு பொருளாதாரம், பிரெஞ்சு ஆகியவற்றில் பட்டம் பெற்றார்.
பிரிட்டனைக் காப்பாற்றுவாரா? ரிஷி சுனக்கிற்கு காத்திருக்கும் 9 சவால்கள் என்ன?
லாஸ்ஏஞ்செல்ஸில் பேஷன் டிசைனிங்கில் பட்டயப்படிப்பையும் அக்ஷதா முடித்துள்ளார். டெலோட்டி, யுனிலீவரிலும் அக்ஷதா பணியாற்றியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ரிஷி சுனக்கை, அக்ஷதா திருமணம் செய்தார். இவர்களுக்கு கிருஷ்மா, அனுஷ்கா ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் அக்ஷதாவுக்கு 70 லட்சம் ஸ்டெர்லிங் மதிப்பில் சொந்தமாக வீடு உள்ளது.