Indian CEO list: உலகை ஆளும் இந்தியர்கள் ! முக்கிய நிறுவனங்களை வழிநடத்தும் இந்தியர்கள் குறித்த பார்வை

By Pothy RajFirst Published Oct 26, 2022, 11:48 AM IST
Highlights

உலகின் முக்கிய நிறுவனங்கள் பலவற்றிலும் இந்தியர்கள் ஆட்சி செலுத்தி, வழிநடத்தி வருகிறார்கள். அவ்வாறு வழிநடத்தும் 11இந்தியர்கள் குறித்துப் பார்க்கலாம்.

உலகின் முக்கிய நிறுவனங்கள் பலவற்றிலும் இந்தியர்கள் ஆட்சி செலுத்தி, வழிநடத்தி வருகிறார்கள். அவ்வாறு வழிநடத்தும் 11இந்தியர்கள் குறித்துப் பார்க்கலாம்.

உலகளவில் புத்திசாலித்தனம், கடும் உழைப்பு, செயல்திறன் ஆகியவற்றில் சிறந்தவர்கல் இந்தியர்கள் என்பதை உலகெங்கிலும் இந்தியர்கள் நிரூபித்து வருகிறார்கள். உலகளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் கொடிநாட்டி வருகிறார்கள். அமெரிக்காவின் சிலிகான் வேலி முதல் உலகின் முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவற்றிலும் இந்தியர்கள் தடம் பதித்துள்ளனர்.

உலகின் 500 முக்கிய நிறுவனங்களில் 30 சதவீதத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர்கள் உள்ளனர், 2015ம் ஆண்டு ஆய்வின்படி உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் 10 சதவீதம் சிஇஓவாகஇருப்பது இந்தியர்கள்தான். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் பொறியாளர்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியர்கள் உள்ளனர்

லக்ஷ்மன் நரசிம்மன்(ஸ்டார்பக்ஸ் சிஇஓ)

அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான லக்ஷமன் நரசிம்மன் இருந்து வருகிறார். இவர் ஏற்கெனவே 2012 முதல் 2019ம் ஆண்டுவரை பெப்சி நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தனர். இது தவிர மெக்கின்ஸி நிறுவனத்திலும் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் நரசிம்மனுக்கு உண்டு. புனேயில் உள்ள புனே பொறியியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் பென்னஸ்லேவேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தவர் நரசிம்மன். 

சுந்தர் பிச்சை(கூகுள் சிஇஓ)

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 1972ம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரின் சொந்தஊர் மதுரை என்றாலும் வளர்ந்தது, படித்தது சென்னையில்தான். காரக்பூர் ஐஐடியில் பொறியியல் படிப்பை முடித்து, அமெரிக்கா சென்றார் சுந்தர் பிச்சை.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப்பட்டமும், பென்னஸ்லேவேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பையும் சுந்தர் பிச்சை முடித்தார். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சுந்தர் பிச்சை தனது கடினமான உழைப்பால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம்தேதி அமர்த்தப்பட்டார். 

சத்யா நாதெள்ளா (மைக்ரோசாப்ட் சிஇஓ)
ஹைதராபாத்தில் பிறந்த சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். 51வயதான சத்யா நாதெள்ளாவுக்கு 3 குழந்தைகள் உள்ளன. முதலில் மைக்ரோசாப்ட் கிளவுட் நிறுவனத்தில் துணைத் தலைவராக 22 ஆண்டுகள் இருந்து தற்போது தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்துள்ளார்

பராக் அகர்வால் (ட்விட்டர் சிஇஓ)
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பர் பராக் அகர்வால். கடந்த 2017ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக அமர்த்தப்பட்டு பின்னர் சிஇஓ உயர்ந்தார், ட்விட்டர் நிறுவத்திலேயே ஏறக்குறைய 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்துக்கு வருவதற்கு முன் பராக் அகர்வால் விளம்பர நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார்.

இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை! டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது! நிர்மலா சீதாராமன் சொன்ன புது விளக்கம்

ஜெயஸ்ரீ உல்லால்(அரிஸ்தா நெட்வொர்க் சிஇஓ)

கிளவு நெட்வொர்க் கார்ப்பரேட் நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஜெயஸ்ரீ உல்லால். அமெரிக்காவின் வர்த்தகத்தில் சக்திவாய்ந்த பெண்ணாக ஜெயஸ்ரீஉல்லால் இருந்து வருகிறார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ உல்லால் லண்டனில் பிறந்தவர், ஆனால் தனது படிப்பை டெல்லியில் முடித்தார். 

சாந்தனு நாராயன்(அடோப் சிஸ்டம்ஸ் சிஇஓ)

அடோப்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தலைவராகவும் இந்தியரான சாந்தனு நாராயன் இருந்து வருகிறார்.  கடந்த 2005ம் ஆண்டிலிருந்து, தலைமை நிர்வாக அதிகாரியாக சாந்தனு இருந்து வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்த நாராயன் பெற்றோர் இந்தியர்கள். 

அரவிந்த் கிருஷ்ணா (ஐபிஎம் சிஇஓ)

இந்தியாவில் பிறந்தவரான அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2020ம் ஆண்டில் இருந்து உள்ளார். மின்னணு பொறியியலில் முனைவர் பட்டம்  பெற்ற அரவிந்த் கிருஷ்ணா 1990ம் ஆண்டிலிருந்து ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளநிலை பொறி்யியல் படிப்பை கான்பூர் ஐஐடியிலும், இல்லிநாய்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் அரவிந்த் கிருஷ்ணா பெற்றுள்ளார்

இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.126 கோடி ஈவுத்தொகை ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி

லீனா நாயர்(சேனல்-சிஇஓ)

பிரிட்டனைச் சேர்ந்த இந்தியரான லீனா நாயர், சேனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். யுனிலீவர் நிறுவனத்தின் மனித வள அதிகாரியாக இருந்து, உலகளவில் பல கிளைகளைக் கண்காணித்தவர். சேனல் நிறுவனத்தின் சிஇஓவாக இளம் வயதில் நியமிக்கப்பட்ட முதல் பெண் லீனா நாயர் என்ற பெருமையைப் பெற்றவர்

புனித் ரெஞ்சன்(டிலோட்டி கன்சல்டிங் எல்எல்பி-சிஇஓ)

டிலோட்டி நிறுவனத்தின் சிஇஓவாக 2015ம் ஆண்டிலிருந்து இருந்து வருபவர் இந்தியரான புனித் ரஞ்சன். இதற்கு முன் டிலோட்டி கன்சல்டிங் நிறுவனத்தில் சிஇஓவாக புனித் இருந்தார். ஹரியானாவின் ரோடக் நகரைச் சேர்ந்த புனித் ரஞ்சன், ஓரிகன் நகரில் உள்ள வில்லியம்டி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தவர்

ரகு ரகுராமன்(விஎம்வேர் –சிஇஓ)

கிளவு கம்யூட்டிங் நிறுவனமான விஎம்வேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரகு ரகுராமன் இருந்து வருகிறார். 2003ம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் இணைந்து, தற்போது சிஇஓவாக உயர்ந்துள்ளார். விஎம்வேர் உலகளவில் பரந்து விரிந்து செயல்பட திட்டமிட்டவர் ரகு ரகுராமன்.

டவ் ஷாம்பு உள்பட ட்ரை ஷாம்பு வகைகளை திரும்பப் பெறும் யுனிலீவர் நிறுவனம்: என்ன காரணம்?

ரிஷி சுனக்(பிரிட்டன் பிரதமர்)

பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் பூர்வீகம் இந்தியா. இவரின் பெற்றோர், மூதாதையர்கள் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் கென்யா சென்று அங்கிருந்து பிரிட்டனுக்கு குடியேறினர். கன்சர்வேட்டிவ் கட்சியில் எம்.பியாக இருந்த ரிஷி சுனக், படிப்படியாக உயர்ந்து நிதி அமைச்சராக பதவி பெற்று, தற்போது பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவரின் மனைவி அக்ஷதா மூர்த்தி, இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!