Today Share Market: 2வது நாளாக உயர்வுடன் தொடங்கிய பங்குசந்சந்தை: 60ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

By Pothy RajFirst Published Oct 28, 2022, 10:06 AM IST
Highlights

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் தொடர்ந்து 2வது நாளாக  உயர்வுடன் இன்று தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் புள்ளிகள் 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் தொடர்ந்து 2வது நாளாக  உயர்வுடன் இன்று தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் புள்ளிகள் 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தீபாவளி மூகூர்த்த வர்த்தகத்துக்குப்பின் ஒருநாள் மட்டுமே பங்குச்சந்தை சரிந்தது. தொடர்ந்து 2வது நாளாக முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்குகளை வாங்கியதால் ஏற்றத்துடன் வர்த்தகம் நகர்ந்து வருகிறது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்: பராக் அகர்வால், விஜயா கடே நீக்கி அதிரடி

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 186 புள்ளிகள் உயர்ந்து, 59,943 புள்ளிகள் அதிகரித்தது, நிப்டி 55 புள்ளிகள் அதிகரித்து, 17,792 புள்ளிகள் ஏற்றம் கண்டது. இந்த உற்சாகம் தொடர்ந்து நீடித்ததால் வர்த்தகம் ஏற்றத்துடன் நடந்து வருகிறது

காலை 10 மணிநிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 297 புள்ளிகள்  உயர்ந்து, 60,054 புள்ளிகள் உயர்வுடந் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில், நிப்டி 82 புள்ளிகள் அதிகரித்து, 17,819 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்வு: உலோகப் பங்குகள் ஆதிக்கம்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 23 நிறுவனப் பங்குகள் விலை ஏற்றத்துடன் நகர்கின்றன, 7 நிறுவனப் பங்குகள் மதிப்பு சரிந்துள்ளது. ரிலையன்ஸ், மாருதி, ஹெட்சிஎப்சி, ஐடிசி, கோடக்வங்கி, நெஸ்ட்லே இந்தியா,மகிந்திரா அன்ட் மகிந்திரா, லார்சன் அன்ட் டூப்ரோ உள்ளிட்ட பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளன.

மாறாக, ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், என்டிபிசி, டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல், சன்பார்மா ஆகிய நிறுவனப் பங்குகள் மதிப்பு குறைந்துள்ளது.

மாருதி சுஸூகி, வேதாந்தா, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்ரீஸ், டாடா பவர் கம்பெனி, ஜெஎஸ்டபிள்யு, பந்தன் வங்கி, ப்ளூ டார்ட் எக்ஸ்பிரஸ், கார்போரன்டம் யுனிவர்சல் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகின்றன

காளையின் ஆதிக்கத்தில் பங்குசந்தை: சென்செக்ஸ் 380 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு!உலோகம் ஏற்றம்

ஜியோஜித் நிதிச்சேவை நிறுவனத்தின் சந்தை தலைமை ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில் “ சந்தையில் காளையின் ஆதிக்கம் நிலவுவதற்கு முக்கியக் காரணம் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகிறது, அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டியைக் குறைத்து அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, மந்தநிலைக்கு செல்லாமல் அமெரிக்கப் பொருளாதாரம் தப்பிக்கும் என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்
 

click me!