2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணியை மத்திய அரசு இன்று தொடங்கியது.
2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணியை மத்திய அரசு இன்று தொடங்கியது.
வளர்ச்சி அடைந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் நிலவும் சூழலில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பட்ஜெட் தயாரிப்பு பணி முதல்கட்டமாக பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுடன் ஆலோசனை நடத்தப்படும். நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள திருத்தப்பட்ட செலவினனங்கள் குறித்து கேட்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும்.
தங்கம் விலை குறைவு! சவரனுக்கு ரூ.280 சரிந்தது: இன்றைய நிலவரம் என்ன?
முதல்நாளா இன்று(10ம்தேதி) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் காலநிலை மாற்றம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, மத்திய புள்ளியியல் மற்றும் நிகழ்ச்சி திட்டம், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் ஒவ்வொரு அமைச்சகங்கள், துறைகளில் திருத்தப்பட்ட செலவினங்கள் எவ்வளவு, அடுத்த நிதியாண்டுக்கு எவ்வளவு பட்ஜெட் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை பெரும்பாலும் நடக்கும். இந்த ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி செயலாளர் மற்றும் செலவினச் செயலாளர் நடத்துவார்கள்.
12 ஆயிரம் ஊழியர்களின் வேலை பறிபோகிறது: 15% ஆட்குறைப்பு செய்ய ஃபேஸ்புக் முடிவு
இந்த மாதம் முழுவதும் ஆலோசனைக் கூட்டம் நடக்கும். மத்திய கூட்டுறவுத்துறை, வேளாண் அமைச்சகம், விவசாயிகள் நலன் துறை, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, ரயில்வே துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுடன் கடைசியாக ஆலோசனை நடத்தப்பட்டு நவம்பர் 10ம் தேதி முடியும்.
பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டபின்புதான், 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் முறைப்படி இறுதியாகும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கியும், உலக வங்கி 6.5சதவீதமாக குறைத்துள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
அதுமட்டுமல்லாமல் நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையின்மை பிரச்சினை, வேலைவாய்ப்பு உருவாக்கம், தேவையை ஊக்கப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை 8% உயர்த்துதல் ஆகியவை பட்ஜெட் தயாரிப்பில் முக்கியமாக கவனம் பெறும்.
செல்லப் பிராணிகளையும் விமானத்தில் பயணிகள் அழைத்துச் செல்லலாம்! அகாசா ஏர் நிறுவனம் அனுமதி
பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பதவி ஏற்று 5வது பட்ஜெட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் தாக்கல் செய்யஇருக்கிறது. நிர்மலா சீதாராமன் தனது முழுமையான, கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின் 2024ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் மக்களவைத் தேர்தல் வந்துவிடும் என்பதால், அவரின் கடைசி பட்ஜெட்டாக இருக்கும்.