hardeep puri: மக்கள்தான் முக்கியம்! எந்த நாட்டிலும் கச்சா எண்ணெய் வாங்குவோம்: ஹர்தீப் பூரி விளக்கம்

By Pothy RajFirst Published Oct 8, 2022, 12:09 PM IST
Highlights

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காதீர்கள் என எந்த நாடும் இந்தியாவிடம் கூறவில்லை. எங்கள் மக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க வேண்டிய இந்திய அரசின் கடமை. நாங்கள் எங்கு வேண்டுமானாலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காதீர்கள் என எந்த நாடும் இந்தியாவிடம் கூறவில்லை. எங்கள் மக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க வேண்டிய இந்திய அரசின் கடமை. நாங்கள் எங்கு வேண்டுமானாலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அதன்பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து பேரல் 140 டாலர் வரை உயர்ந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்திலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது.

செல்லப் பிராணிகளையும் விமானத்தில் பயணிகள் அழைத்துச் செல்லலாம்! அகாசா ஏர் நிறுவனம் அனுமதி

இதையடுத்து, ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடை விதித்த ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஆகியவை கச்சா எண்ணெய் இறக்குமதி, இயற்கை எரிவாயுஇறக்குமதிக்கும் தடை விதித்தன.

ஆனால், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் பெரும்பகுதி எரிபொருள் தேவை ரஷ்யா மூலமே நிறைவேற்றப்பட்டு வந்தது. இந்த தடையால் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. இந்த விலை உயர்வுக்கு இந்தியாவும் தப்பிக்கவில்லை. 


ஆனால், சர்வதேச சந்தை விலையைவிட குறைந்தவிலைக்கு கச்சா எண்ணெயை தனது நட்பு நாடுகளுக்கு விற்க ரஷ்யா முன்வந்தது. இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து அதிகமான அளவு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது.

12 ஆயிரம் ஊழியர்களின் வேலை பறிபோகிறது: 15% ஆட்குறைப்பு செய்ய ஃபேஸ்புக் முடிவு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி 50 மடங்கு அதிகரித்துள்ளது, 10 சதவீதம் மட்டுமே மற்ற கச்சா எண்ணெய் உலகச்ச ந்தையில் வாங்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் போருக்கு முன் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி வெறும் 0.2 % மட்டுமே இருந்தது. ஆனால், விலை குறைவாகக் கிடைத்ததால், அதிக அளவு இந்தியா இறக்குமதி செய்தது. ஆனால், அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக ரஷ்யாவிடம் இருந்துகச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்துவிட்டன.


இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவை அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா நிர்பந்தப்படுத்துவதாக செய்திகள் வெளியாகின. 


இந்த சூழலில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி அமெரிக்கா பயணம் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெனிபர் கிரான்போமை வர்த்தகம் தொடர்பாக சந்தித்துப் பேசினார்.

500 நாட்கள்; 25ஆயிரம் மொபைல் டவர்; ரூ.26,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரச ஒப்புதல்
இந்த சந்திப்புக்குப்பின் மத்திய அமைச்சர் ஹர்திப் பூரி அளித்த பேட்டியின்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என எந்த நாடும் கேட்டுக்கொண்டதா என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ஹர்திப் பூரி பதில் அளிக்கையில் “ இந்திய மக்களுக்கு பெட்ரோல், டீசலை வழங்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. ஆதலால் இதுபோன்ற விவாதத்தை மிகப்பெரிய நுகர்வு இருக்கு இந்திய மக்களிடம் கொண்டு செல்ல முடியாது என்பதால், இந்தியா எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெயை வாங்கும்.


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று இதுவரை எந்த நாடும் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது இல்லை. உங்கள் கொள்கையில் நீங்கள் தெளிவாக இருந்தால் அதாவது, எரிபொருள் பாதுகாப்பு, குறைவான விலையில் எரிபொருள் தர வேண்டும் என்ற கொள்கை இருந்தால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கலாம்
இவ்வாறு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்
 

click me!