தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏறுமுகத்தில்இருந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏறுமுகத்தில்இருந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 35ரூபாயும், சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,840 ஆகவும், சவரன், ரூ.38,720 ஆகவும் இருந்தது.
ஊசலாட்டத்தில் தங்கம் விலை! ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ.1080 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
இந்நிலையில் திங்கள்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 35ரூபாய் குறைந்து, ரூ.4,805ஆக சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.35 சரிந்து, ரூ.38,440ஆக உள்ளது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,805ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த வாரத்தில் உயர்வுடன் நகர்ந்தது, சவரனுக்கு ரூ.1080 அதிகரித்தது. அது மட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்குப்பின், தங்கம் சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது. ஆனால் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
தணிந்தது தங்கம் விலை! நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல்: இன்றைய நிலவரம் என்ன?
கடந்த வாரத்தில் சவரனுக்கு ஆயிரத்துக்கு மேல் அதிகரித்ததால் நகைப்பிரியர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த விலைக் குறைவு அவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
வெள்ளி விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 20 பைசா குறைந்து, ரூ.64.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,200 சரிந்து, ரூ.64,800 ஆகவும் விற்கப்படுகிறது