small savings scheme: முக்கியத் திட்டங்களுக்கு இல்லை! சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு மட்டும் வட்டி உயர்வு

By Pothy RajFirst Published Sep 30, 2022, 8:43 AM IST
Highlights

9 காலாண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தாமல் வைத்திருந்த மத்திய அரசு 27 மாதங்களுக்குப்பின் நடப்பு நிதியாண்டில் 3வது காலாண்டில் வட்டியை 30 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.

9 காலாண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தாமல் வைத்திருந்த மத்திய அரசு 27 மாதங்களுக்குப்பின் நடப்பு நிதியாண்டில் 3வது காலாண்டில் வட்டியை 30 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.

இந்த வட்டி உயர்வு என்பது அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களுக்கும் பொருந்தாது. சில திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, வருமானவரிச்ச சலுகை பெறாத சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு மட்டும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.


மக்களின் வரவேற்பு பெற்ற பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை.ஆனால், வருமானத்துக்கு வரி செலுத்தக்கூடிய மற்ற 5 திட்டங்களுக்கு வட்டிவீதம் 30 பிபிஎஸ்வரை உயர்த்தப்பட்டுள்ளது.


கடைசியாக 2020-21ம் ஆண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்தது. அதன்பின் 9 காலாண்டுகளாக வட்டிவீதத்தில் மாற்றம் ஏதும் இல்லை. 3 மாதங்களுக்கு ஒருமுறை சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டிவீதம் மாற்றி அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


திருத்தப்பட்ட அறிவிப்பின்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3வது காலாண்டில், “ அஞ்சலகத்தில் 3 ஆண்டுகளுக்கான சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 5.5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கு 20 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது முன்பு 7.40 சதவீதம் வழங்கப்பட்ட வட்டி 7.60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டியும், காலமும் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டிவீதம் 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது, காலம் 123 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு, வட்டி 6.90 சதவீதமாகவும், 124 மாதங்களாக இருந்தது.
மாத வருமானம் பெறும் திட்டத்துக்கு வட்டி 10 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்ப 6.60 சதவீதமாக இருந்தது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரிப்பு: வெள்ளி விர்ர்! நிலவரம் என்ன?
பிபிஎப் திட்டம், என்எஸ்சி திட்டத்துக்கு வட்டி வீதம் அதேநிலையில் நீடிக்கிறது. அதாவது பிபிஎப் கணக்கிற்கு 7.1%, என்எஸ்சி திட்டத்துக்கு 6.8% வட்டி தொடர்கிறது


அஞ்சலகத்தில் ஓர் ஆண்டு டெர்ம் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி 6.5% என்ற அளவில் இந்தகாலாண்டில் நீடிக்கிறது. 5 ஆண்டுகளுக்கான டெர்ம் டெபாசிட்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை 6.7% வட்டி வழங்கப்படுகிறது. 

பாக்கெட் பத்திரம்! இஎம்ஐ அதிகரிக்கும்! ரெப்போ ரேட் 50 புள்ளிகள் வரை ஆர்பிஐ உயர்த்த வாய்ப்பு
பெண் குழந்தைகளுக்கான தங்க மகள் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்துக்கான வட்டி 7.6% என்ற அளவில் நீடிக்கிறது.மாற்றம் ஏதும் இல்லை. சிறுசேமிப்புத் திட்டங்களில் 7 திட்டங்களுக்கு வட்டிவீதத்தில் மாற்றமில்லை, 5 திட்டங்களுக்கு மட்டும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

click me!