வரி செலுத்துபவர்களுக்கு அச்சமின்றி இருக்கும் விதத்தில், ஜிஎஸ்டி சட்டத்தில் ஏற்கெனவே ஐபிசி பிரிவின் கீழ் வரும் தண்டனைக் குற்றப்பிரிவுகளை நீக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
வரி செலுத்துபவர்களுக்கு அச்சமின்றி இருக்கும் விதத்தில், ஜிஎஸ்டி சட்டத்தில் ஏற்கெனவே ஐபிசி பிரிவின் கீழ் வரும் தண்டனைக் குற்றப்பிரிவுகளை நீக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஜிஎஸ்டி சட்டத்தில் தண்டனைக் குற்றப்பிரிவுகளை நீக்குவது குறித்த பரிசீலனை அடுத்துவரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துவிட்டால், நிதிஅமைச்சகம் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தங்கள் செய்து, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்படும்.
நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடக்கம்: எதற்கு முக்கியத்துவம்?
நிதிஅமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் “ஜிஎஸ்டி சட்டத்தில் பிரிவு 132ல் மாற்றங்களைக் கொண்டுவருவதில் சட்டக்குழு இறுதி செய்துள்ளது. இதன்படி ஜிஎஸ்டி சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றப்பிரிவு நீக்கப்படும்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் ஜிஎஸ்டி சட்டத்தில் இருந்து நீக்கப்படும். இந்த திருத்தங்கள் ஜிஎஸ்டி் கவுன்சில் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒப்புதல் அளித்தபின், நாடாளுமன்றம் ஒப்புதல் பெற்று சட்டமாகும். நாடாளுமன்றம் ஒப்புதல்அளித்தபின், மாநிலங்கள் தங்கள் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தங்கள் செய்யலாம் ” எனத் தெரிவித்தார்.
உருக்கு, இரும்பு தாது ஏற்றுமதி வரி ரத்து! சில பொருட்கள் இறக்குமதிக்கு வரிஉயர்வு
வரிகள்குறித்த வல்லுநர்கள் கூறுகையில் “ போலியாக ஜிஎஸ்டி பில் அளிப்பதுதான் தண்டனைப்பிரிவு சட்டத்தில் வரும். முறையான இன்வாய்ஸ் இல்லாமல், பில் இல்லாமல் பொருட்கள் சப்ளை செய்யப்படும்போதுதான் இது குற்றமாகும். போலியான இன்வாய்ஸ் மூலம் இன்புட் டேக்ஸ் கிரெடிட் எடுத்தாலும் இந்தக் குற்றப்பிரிவில் வரும்.
ஏஎம்ஆர்ஜி மற்றும் அசோசியேட்ஸ் ராஜத் மோகன் கூறுகையில் “ போலியான இன்வாய்ஸ் ஏற்கப்படுவது என்பது ஐபிசி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். இந்தப் பிரிவு குற்றம் ஐபிசி 420யின் கீழ் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறையும், ஜிஎஸ்டி கோட் கீழ் 5ஆண்டுகள் சிறையும் வழங்கப்படும். ஜிஎஸ்டி வரி ஏய்ப்பைப் பொறுத்து தண்டனையின் அளவு மாறுபடும் ” எனத் தெரிவித்தார்