தங்கம் விலை தொடர்ந்து மளமளவெனச் சரிந்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. நீண்டகாலத்துக்குப்பின் சவரன் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து மளமளவெனச் சரிந்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. நீண்டகாலத்துக்குப்பின் சவரன் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.44 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.352 சரிந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,754 ஆகவும், சவரன், ரூ.39,032 ஆகவும் இருந்தது.
]
september 1: அலர்ட்! செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்: தெரிஞ்சுக்கோங்க
இந்நிலையில் வியாழக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.44 குறைந்து, ரூ.4,710 ஆகச் சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.37,680ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,710ஆக விற்கப்படுகிறது.
இந்தவாரம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை மளமளவெனச் சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 சரிந்துள்ளது, சவரனுக்கு ரூ.440 வீழ்ச்சி அடைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின், தங்கம் விலை சவரன் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. இடைப்பட்ட ஒரு நாள் மட்டும் அதாவது செவ்வாய்கிழமை மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.35 சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது
lpg cylinder price: lpg price: மிகப்பெரிய நிம்மதி! எல்பிஜி சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைப்பு
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் முதலீட்டாளர்களை நிம்மதியாக முதலீடு செய்யவிடாமல் தடுக்கிறது. பெடரல் வங்கி எந்த அளவு வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
பெடரல் வங்கியின் வட்டி வீத அறிவிப்பு செப்டம்பரில் வரும்போது தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
adani: கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரிப்பு: வளர்ச்சி என்ன தெரியுமா?
டாலர் மதிப்பு வலுப்பெறும்போது, முதலீடுகள் அனைத்தும் டாலர் மீது திரும்பும் அப்போது தங்கத்தின் மீதான முதலீடு, தேவை குறையும் போது விலையில் பெரிய மாற்றம் இருக்கலாம்.
வெள்ளி விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.58ஆகவும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.58ஆயிரத்துக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.