மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் வகையில் வர்த்தகத்துக்கான எல்பிஜி சமையல் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன.
மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் வகையில் வர்த்தகத்துக்கான எல்பிஜி சமையல் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன.
இதன்படி, 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.91.50 பைசா குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலைக் குறைப்பு செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
september 1: அலர்ட்! செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்: தெரிஞ்சுக்கோங்க
இதையடுத்து, வர்த்தகரீதியான எல்பிஜி சமையல் சிலிண்டர் விலை ரூ.1976.07 ஆக இருந்தது இனிமேல், ரூ. 1,885 ஆகக் குறையும். கொல்கத்தாவில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1995 ஆகவும், மும்பையில் ரூ.1844 ஆகவும் குறையும்.
elon musk: twitter: tesla: டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு 2வது நோட்டீஸ்
சென்னையில் ரூ.,2141 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.2,045 ஆகச் சரியும்.
இதனால் வர்த்தகரீதியான சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தும் சிறிய ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள் போன்றவற்றுக்கு பெரிய நிம்மதியாக அமையும். இந்த விலைக் குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு விற்கும் உணவுப் பொருட்களின் விலையையும் குறைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
தொடர்ந்து 5-வது மாதமாக வர்த்தகரீதியான சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.36 குறைக்கப்பட்டது.
adani: கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரிப்பு: வளர்ச்சி என்ன தெரியுமா?
ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஜூலை 6ம் தேதி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.