september 1: அலர்ட்! செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்: தெரிஞ்சுக்கோங்க

By Pothy RajFirst Published Aug 31, 2022, 2:55 PM IST
Highlights

செப்டம்பர் மாதம் நாளை தொடங்க இருப்பதையடுத்து,  நடைமுறை வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு விஷயங்களில் மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

செப்டம்பர் மாதம் நாளை தொடங்க இருப்பதையடுத்து,  நடைமுறை வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு விஷயங்களில் மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

குறிப்பாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம், விவசாயிகளுக்கான பிஎம் கிசான் யோஜனா திட்டம்உள்ளிட்டவற்றில் மாற்றம் வர உள்ளது.

adani: கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரிப்பு: வளர்ச்சி என்ன தெரியுமா?

பிஎன்பி கேஒய்சி அப்டேட்

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் KYC விவரங்களை அப்டேட் செய்ய நீண்ட அவகாசத்தை வங்கி அளித்திருந்தது. அந்த அவகாசம் ஆகஸ்ட் 31ம்தேதியுடன் முடிந்துவிட்டது. கேஒய்சி விவரங்களை அப்டேட்ச செய்யாதவர்களின் சேமிப்புக்கணக்கு நிறுத்தி வைக்கப்படும், பரிமாற்றங்கள் ஏதும் செய்ய முடியாது. 

சமையல் கேஸ்விலை

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் 15ம் தேதியிலும் எல்பிஜி கேஸ் விலை மாற்றம் வருகிறது. அந்த வகையில் நாளை சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம். கடந்த 15 நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. ஆதலால், நாளை சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும்.

elon musk: twitter: tesla: டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு 2வது நோட்டீஸ்

பிஎம் கிசான்

பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளிகளான பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் மின்னணு கேஒய்சியில் விவரங்களை நிரப்ப ஆகஸ்ட் 31ம் தேதி கடைசித் தேதியாகும். இந்த கேஒய்சியை விவசாயிகள் நிரப்பாமல் இருந்தால், அவர்களுக்கான உதவித் தொகை வருவது தாமதமாகும்.

சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்வு

உ.பியில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையைப் பயன்படுத்தி டெல்லிசெல்லும் வாகனங்களுக்கான டேல்கேட் கட்டணம் செப்டம்பர் 1ம் தேதிமுதல் உயர்கிறது. இதன்படி கி.மீருக்கு ரூ.2.50 என இருந்தது, இனி ரூ.2.65 ஆக உயர்த்தப்படுகிறது. கிலோமீட்டருக்கு 10பைசா உயர்கிறது. லகுரக வர்த்தக வாகனங்கள், சிறிய சரக்கு வாகனங்கள், மினிபஸ் ஆகியவை கிலோமீட்டருக்கு ரூ.4.15 செலுத்த வேண்டும். பேருந்து, லாரி, டிரக் போன்றவற்றுக்கு இனிமேல் கிலோமீட்டருக்கு ரூ.8.45 செலுத்த வேண்டும்

வாரன் பஃபெட்டுக்கு பிறந்த நாளும், அவரைப் பற்றி வெளிவராத உண்மைகளும்!!

காப்பீடு கமிஷன் குறைவு

காப்பீடு முகவர்களுக்கான கமிஷன் வீதத்தை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் குறைத்துள்ளது. இது செப்டம்பர் 1ம் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி காப்பீடு முகவர்களுக்கு 35 சதவீதம் வரை வந்த கமிஷன் 30% மாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆடி கார் விலை உயர்வு

ஆடி நிறுவனம் தனது கார்களின் விலையை செப்டம்பர் 1ம் தேதி முதல் உயர்த்துகிறது. இதன்படி ஆடி நிறுவனம் தனது கார்களின் விலையை 2.5% உயர்த்துகிறது. புதிய விலை செப்டம்பர் 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். 
 

click me!