டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் ஏற்கெனவே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்ட நிலையில் 2வதாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் ஏற்கெனவே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்ட நிலையில் 2வதாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதாவது ட்விட்டர் நிறுவனம் எவ்வாறு போலிக்கணக்குகளை கண்டுபிடிக்கும், எவ்வாறு, போலி கணக்குகளை தடுத்து நிறுத்தும் என்று கேட்டு 2வது நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
வாரன் பஃபெட்டுக்கு பிறந்த நாளும், அவரைப் பற்றி வெளிவராத உண்மைகளும்!!
ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது.
ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் திடீரென தெரிவித்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி!
ஆனால், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்குடனான ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டதேத்தவிர அந்தவிவரங்களை வழங்கவில்லை. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தார்.
எலான் மஸ்க் அறிவிப்பை எதிர்த்தும், ஒப்பந்தத்தை முன்அறிவிப்பின்றி முறித்துக்கொண்டதை எதிர்த்தும் ட்விட்டர் நிறுவனம் டெலாவேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 17ம் தேதி முதல் விசாரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு 2வது நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் பாதுகாப்பு தலைமை அதிகாரி பீட்டர் ஜாட்கோவுக்கு எலான் மஸ்க் அனுப்பிய நோட்டீஸில், “ ட்விட்டர் நிறுவனம் எவ்வாறு போலிக் கணக்குகளை தடுக்கப்போகிறது. அதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஜாக்கோ, “ ட்விட்டர் நிறுவனம் தனது பாதுகாப்பு அம்சங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது. போலிக்கணக்குகளை நீக்குவதற்குப் பதிலாக பயன்பாட்டாளர்களை அதிகப்படுத்தவே முன்னுரிமை அளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்க் செவ்வாய்கிழமை ட்விட்டர் நிறுவனத்துக்கு 2வது நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் “ ட்விட்டர் நிறுவனம் இதுவரை போலிக்கணக்குகளை எவ்வாறு தடுக்கப்போகிறது என்பது குறித்து தெரிவிக்கவில்லை, எவ்வாறுநீக்கப்போகிறது என்றும் தெரிவிக்கவில்லை. அதற்குரிய விவரங்களை அளித்தால் நீதிமன்றத்தில் வாதம் வைக்க வலுவாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.