
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.700க்கு மேல் சரிந்துள்ளதால் தங்கம் வாங்க மக்களுக்கு இது சிறந்த நேரமாகும்
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 28 ரூபாயும், சவரனுக்கு 224 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,850க்கும், சவரன் ரூ.38,800க்கும் விற்கப்பட்டது.
எல்ஐசி பாலிசிதாரர்களே நல்ல வாய்ப்பு ! காலாவதியாகிவிட்ட காப்பீட்டை புதுபிக்க சூப்பர் சான்ஸ்
தங்கம் விலை இன்று காலை 4வது நாளாக மீண்டும் வீழ்ச்சி அடைந்தது. கிராம் ஒன்றுக்கு 28 ரூபாய் சரிந்து, ரூ.4,822 ஆகவும், சவரனுக்கு ரூ.224 சரிந்து, ரூ.38,576 ஆகவும் விற்கப்படுகிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4822ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் சரிவை நோக்கியே இருந்து வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை முதல் இன்றுவரை தங்கம் சவரனுக்கு ரூ.700க்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
புதிய மாருதி ‘மைலேஜ் அரசன்’ அல்டோ k10 கார்: ரூ.3.90 லட்சத்தில் அட்டகாச வசதிகள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வலுப்பெறுவது போன்றவை தங்கம் விலை குறைவுக்கான காரணங்களாகும்.
தங்கம் சவரன் ரூ.39ஆயிரத்தைத் தொட்டபோது நடுத்தர மக்கள், சாமானியர்கள் மனதில் பீதியைக் கிளப்பிய நிலையில் இப்போது சவரன் விலை ரூ.38ஆயிரத்துக்கு கீழ் செல்லும் நிலை இருக்கிறது.
குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றமா? ரயில்வே துறை விளக்கம்
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 80 பைசா குறைந்து, ரூ.62.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.62,000க்கும் விற்கப்படுகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.