NSE:Adani Group:என்எஸ்இ பட்டியலில் அதானி நிறுவனங்கள்| பதறும் முதலீட்டாளர்கள்! SEBI தலையிட கோரிக்கை

By Pothy Raj  |  First Published Feb 27, 2023, 12:58 PM IST

தேசியப் பங்குச் சந்தையில் 14 நிறுவனங்களுடன், அதானி குழுமத்தின் 5 நிறுவனங்கள் சேர்க்கப்படுவதற்கு முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


தேசியப் பங்குச் சந்தையில் 14 நிறுவனங்களுடன், அதானி குழுமத்தின் 5 நிறுவனங்கள் சேர்க்கப்படுவதற்கு முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

என்எஸ்இ வாரியம் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பாளர் செபி ஆகியோர் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் சேமிப்பு இதில் அடங்கி இருப்பதால், இதை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்

Latest Videos

கடந்த 17ம் தேதி என்எஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் “ பங்கு பராமரிக்கு துணைக் குழு எடுத்த முடிவின்படி 14 பங்குகளை வரும் மார்ச் 31ம்தேதி முதல் மாற்ற உள்ளது. இது குறிப்பிட்டகாலஇ டைவெளியில் செய்யப்படும் நடவடிக்கை.இதில்அதானி வில்மர், அதானி டோட்டல் கேஸ், அதானி பவர் ஆகியவை சேர்க்கப்பட உள்ளன”எ னத் தெரிவித்தது. இது தவிர வேறு 10 நிறுவனங்களும் சேர்க்கப்படஉள்ளன.

பிஎப் உறுப்பினர்கள் அதிக பென்சன் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: EPFO புதிய அறிவிப்பு

இதில் பிரச்சினை என்னவென்றால் ஏற்கெனவே நாளுக்கு நாள் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் சரி்ந்துவரும் நிலையில் என்எஸ்இ அமைப்பில் அதானி குழுமத்தின் பங்குகளை எவ்வாறு சேர்க்கலாம் இது முதலீட்டாளர்களின் சேமிப்புக்கும்,முதலீட்டுக்கும் ஆபத்தாக அமையும் என்று முதலீட்டாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். 

அமெரிக்காவின்  ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமத்தின் தில்லுமுல்லு குறித்து அறிக்கை வெளியிட்டது. அப்போது, கடந்த ஜனவரி 24ம் தேதி அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19 லட்சம் கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பைவிட உயர்ந்திருந்தது. ஆனால், அடுத்த ஒரு மாதத்துக்குள் ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி குழுமம் ரூ.12 லட்சம் கோடி மதிப்பை இழந்துள்ளது.

நிப்டி 100 பட்டியலில் ஏற்கெனவே அதானி என்டர்பிரைசர்ஸ் இருக்கிறது. இதில் நிப்டி 50 பட்டியலில் அதானி போர்ட்ஸ் இருக்கிறது, இதில் மேலும் புதிதாக அதானி நிறுவனங்கள் வரஉள்ளன

கோடீஸ்வர பரமபதத்தில் 37-வது இடத்துக்கு சரிந்த அதானி! ஏணியில் ஏறிய அம்பானி

இது குறித்து என்எஸ்இ தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு அளித்த விளக்கத்தில் “ நிப்டி பங்குகளின் மறுசீரமைப்பு என்பது, பங்குகளை எவ்வாறு முதலீ்ட்டாளர்கள் முந்தைய காலத்தில் வாங்கியுள்ளார்கள் என்பதை பொருத்து அமையும். ஆண்டுக்கு இருமுறை எடுக்கப்படும் புள்ளிவிவரங்கள் அடிப்படைியில் நிப்டியில் நிறுவனங்கள் பட்டியலிடப்படும்.

அந்தவகையில் ஜனவரி மற்றும்ஜூலை மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் எந்த நிறுவனங்களின் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதோ அந்த ப் பங்குகள் இடம் பெறும். அந்த வகையில் அதானி குழுமத்தின் பங்குகள் இடம் பெற்றுள்ளன. புதிய பங்குகள் வரும் மாற்றம் மார்ச் 31 முதல் நடைமுறைக்குவரும்” எனத் தெரிவித்துள்ளது

30 நாட்களில் அதானி குழுமத்துக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு

நிதி ஆலோசகர், வல்லுநர் ஜெய்மனி பகவதி கூறுகையில் “ அதானி குழுமத்தின் பங்குகளை என்எஸ்இ பட்டியலில் கொண்டுவருவதற்கு முன் என்எஸ்இ, செபி மறுஆய்வு செய்வது அவசியம். அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த ஒரு மாதமாக மோசமான சரிவில் இருந்துவருவதால் அந்த நிறுவனப் பங்குகளை என்எஸ்இ பட்டியலில் வைப்பது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பில்லை” எனத் தெரிவித்தார்

click me!