Gautam Adani Net Worth: கோடீஸ்வர பரமபதத்தில் 37-வது இடத்துக்கு சரிந்த அதானி! ஏணியில் ஏறிய அம்பானி

By Pothy RajFirst Published Feb 27, 2023, 12:10 PM IST
Highlights

உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி 37-வது இடத்துக்குச் சரிந்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 3378 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி 37-வது இடத்துக்குச் சரிந்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 3378 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

அதாவது கெளதம் அதானி சொத்து மதிப்பு 4ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் குறைந்துவிட்டது. 
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்ட 50 நாட்களுக்குள்ளாக அதானிகுழுமத்தின் சொத்து மதிப்பு 12 லட்சம் கோடி டாலர் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியானது.

கடந்தவாரத்தில் இருந்தநிலையைவிட, இன்று அதானியின் சொத்து மதிப்பு 4.4 சதவீதம் குறைந்துள்ளது, அதாவது,  160 கோடி டாலர் குறைந்துள்ளது. இதற்கு இந்தியப் பங்குச்சந்தையில் இன்று காலை முதல், அதானி குழுமத்தின் பங்குகள் மோசமாக செயல்பட்டு இழப்பில் சென்று வருவது காரணமாகும்.

பிஎப் உறுப்பினர்கள் அதிக பென்சன் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: EPFO புதிய அறிவிப்பு

பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த தில்லுமுல்லு மற்றும் மோசடிகள் குறித்து கடந்த மாதம் 24ம் தேதி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 24ம் தேதி அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19 லட்சம் கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பைவிட உயர்ந்திருந்தது. ஆனால், அடுத்த ஒரு மாதத்துக்குள் அதானி குழுமம் ரூ.12 லட்சம் கோடி மதிப்பை இழந்துள்ளது.

இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதில் இருந்து நேரம் செல்லச்செல்ல வீழ்ச்சி விசாலமடைந்து கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றார்போல் அதானி குழுமத்தின் உள்ள அதானி கிரீன், அதானி ட்ரான்ஷ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி என்டர்பிரைசர்ஸ்,  ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், அதானி பவர், என்டிடிவி பங்குகள் மதிப்பு சரிந்து வருகிறது.

ஒரு பக்கம் அதானி குழுதமத்தின் பங்குமதிப்பு சரிவு மற்றொரு பக்கம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிநிலையாக இருந்துவருகிறார். இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பு இடைவெளி விரிவடைந்துகொண்டே செல்கிறது.

30 நாட்களில் அதானி குழுமத்துக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதானியைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8,360 கோடி டாலராக இருக்கிறது.உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் 8-வது இடத்தில் உள்ளார். 

click me!