டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 35 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருந்தநிலையில் கூடுதலாக குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 35 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருந்தநிலையில் கூடுதலாக குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வேறுபணி, ஊதியப்பற்றாக்குறை, மனமாற்றம், புதிய சூழல் ஆகியவற்றுக்காக வேலையிலிருந்து விலகுவது 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதால் கூடுதலாக ஆட்கள் எடுக்க இருக்கிறது.
தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! சவரன் 38,000க்கு கீழ் வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?
கடந்த மாதம் 30ம் தேதி டிசிஎஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் விலகுதல் அளவு கடந்த ஓர் ஆண்டில் 21.5 சதவீதமாக அதிகரி்த்துள்ளது. ஆனால், இந்த பணி விலகல் அளவு நிறுவனத்தின் கணிப்பைவிட அதிகமாகும். இருப்பினும் வரும் காலாண்டுகளில் ஊழியர்கள் விலகல் அளவுபடிப்படியாகக் குறையும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது
இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைவர் மிலிந்த் லக்காட் கூறுகையில் “ நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் பணி விலகல், வேறுநிறுவனத்துக்குமாறுதல் போன்றவை குறைவதற்கு குறைந்தபட்சம் ஓர் ஆண்டு தேவைப்படும் அப்போதுதான் 21 சதவீதத்துக்கும் கீழ் செல்லும். ஆதலால், நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
அமெரிக்க பெடரல்வங்கி முன்னாள் தலைவர் உள்பட 3 அறிஞர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு
ஆனால், படிப்படியாக வேலையிலிருந்து ஊழியர்கள் விலகுவது குறையும். கடந்த இரு காலாண்டுகளாக நாங்கள் 35 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்துள்ளோம். இதில் 20ஆயிரம் பேர் 2வது காலாண்டில் மட்டும் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள். ஊழியர்களின் திறன்மேம்பாட்டில் மட்டும் கடந்த 9 மாதங்களாக கவனம் செலுத்தி, முதலீடு செய்து வருகிறோம். கடந்த ஆண்டில் 1.19 லட்சம் பேரை வேலைக்கு எடுத்தோம் ” எனத் தெரிவித்தார்
கடந்த சில காலாண்டுகளாக மிகப்பெரிய ஐ.டி. நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்கள் விலகல் பிரச்சினையை அதிகமாகச் சந்தித்து வருகின்றன. இந்திய ஐ.டி. நிறுவனங்களில் கடந்த நிதியாண்டில் மட்டும் ஊழியர்கள் விலகல் 25.2 சதவீதமாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் தொடர்ந்தது.
இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் விலகல் 28.4 சதவீதம், ஹெச்சிஎல் நிறுவனத்தில் 23.8சதவீதம், விப்ரோவில் 23.3 சதவீதமாக இருந்தது.
மக்கள்தான் முக்கியம்! எந்த நாட்டிலும் கச்சா எண்ணெய் வாங்குவோம்: ஹர்தீப் பூரி விளக்கம்
இதையடுத்து, மனிதவளத்தை வலுப்படுத்தும் நோக்கில் களமிறங்கியுள்ள டிசிஎஸ் நிறுவனம் ஏற்கெனவே 35 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 12 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது.