தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. சவரன் மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. சவரன் மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 35ரூபாயும், சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
தங்கம் விலை குறைவு! சவரனுக்கு ரூ.280 சரிந்தது: இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,775 ஆகவும், சவரன், ரூ.38,200 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 35ரூபாய் குறைந்து, ரூ.4,740ஆக வீழ்ச்சி அடைந்தது. சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.37,920 ஆகச் சரிந்தது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,740ஆக விற்கப்படுகிறது.
ஊசலாட்டத்தில் தங்கம் விலை! ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ.1080 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை கடந்த வாரத்தில் சவரனுக்கு ரூ.1,080 வரை அதிகரித்தது. சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் நீண்ட காலத்துக்குப்பின் அதிகரித்தது. ஆனால் இந்த வாரத்தில் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது, இரு நாட்களில் மட்டும் கிராமுக்கு 70 ரூபாயும், சவரனுக்கு 560 ரூபாயும் சரிந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாகக் குறைந்து வருவது, நடுத்தரக் குடும்பத்தினர், சாமானியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களே தங்கம் இப்போது வாங்கலாமா..? சற்று விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம்..
வெள்ளி விலை சற்றுக் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.64.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 சரிந்து, ரூ.64,000 ஆகவும் விற்கப்படுகிறது